Tuesday, February 17, 2015
உடுமலை அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 4,655 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் அழித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வீதம்பட்டி பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29–ந் தேதி கேரளாவுக்கு எரிசாயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதைதொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த இளங்கோவன் (வயது 33) என்பவரது தோட்டத்தில் சோதனை செய்தபோது அங்கு சிமெண்ட் கூரை போடப்பட்ட குடோனில் 133 கேன்களில் தலா 35 லிட்டர் வீதம் 4,655 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அந்த எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 4,655 லிட்டர் எரிசாராயத்தை கலால்துறை தனிதாசில்தார் கனகராஜ், குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், வருவாய் ஆய்வாளர், கிராமநிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் நேற்று குடிமங்கலம் அருகே உள்ள குமணன் குட்டையில் கொட்டி தீயிட்டு அளிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
TRIVANDRUM ACTIVITIES CBOA Trivandrum Region today donated 40 bottles of sanitizers and 1500 masks to Trivandrum District City ...
-
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி, பாரதிநகர், ராஜீவ்நகர், பொன்னான்டி நகர் உள்ளிட்ட 22 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் ச...
-
ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் சாயக் கழிவுநீரை வெளியேற்றி வரும் பிரிண்டிங் ஆலைகளை மூட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வல...
-
திருப்பூர் செட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி இடத்தில் தெற்கு வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதை கைவிட்டு, மாற்று இடத்தில் கட்ட வேண்டு...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து தமிழகத்த...
-
திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் 75ஆவது சுதந்திர தின விழா உதவி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது திருச்சி 75 சுதந...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில் மே-23 ...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...

0 comments:
Post a Comment