Sunday, November 29, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்புகளை சீரமைக்க ரூ.119.60 கோடி மதிப்பில் அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் உத்தரவிற்கிணங்க சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கடந்த நான்கு நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
இன்று நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகைத்தந்து மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளம் பாதித்த குடியிருப்பு பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக சுற்றுலா மாளிகையில் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார், மேயர் அந்தோணி கிரேஸ் ஆகியோர் பங்கேற்று வெள்ள நீரை குடியிருப்பு பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற்றுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து மாநகராட்சிப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கக்கன்ஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த குடிசை வீடுகளை இழந்த 238 நபர்களுக்கு நிவாரண நிதியுதவியை அமைச்சர் வழங்கினார்.பின்னர் மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார், இது தொடர்பாக கூறும் போது: தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 651 குடிசை வீடுகள் பாதிக்ப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு நேற்று வரை ரூ,18.19 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (28.11.2015) மாநகராட்சிப் பகுதகளை சார்ந்த பாதியளவு வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.4100/- வீதம் 111 நபர்களுக்கும், முழுமையாக வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.5000/- வீதம் மொத்தம் 127 நபர்களுக்கும் மொத்தம் ரூ,10.90 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.29 இலட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆனையர் பூங்கொடி அருமைக்கண், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், சார் ஆட்சியர் கோபாலசுந்தரராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
0 comments:
Post a Comment