Friday, July 18, 2014
சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள திம்பம் அடர்ந்த வனப்பகுதியாகும்.
நேற்று இரவு வன ஊழியர் கிருஷ்ணன் என்பவரை சிறுத்தை அடித்து கொன்று தின்றது.
திம்பம் சோதனை சாவடி அருகே இந்த துயர சம்பவம் நடந்து உள்ளது.
இந்த பகுதியில் நடமாடும் சிறுத்தையை கண்காணிக்க ஏற்கனவே கண்காணிப்பு காமிரா வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த காமிராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகவில்லை.
இதனால் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ராஜேந்திரன், பத்மா ஆகியோரது தலைமையில் 100 வனத்துறையினர் திம்பம் மலைப்பகுதியில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
இவர்கள் சிறுத்தை நடமாடும் கால் தடம் மற்றும் எச்சம் ஆகியவை தென்படுகிறதா? என்று கண்காணித்து வருகிறார்கள்,
இந்த கண்காணிப்பின் போது அங்கு பதுங்கி இருக்கும் சிறுத்தை பாய்ந்து வந்து தாக்காமல் இருக்க வன ஊழியர்கள் தகுந்த பாதுகாப்புடன் செல்கிறார்கள்.
மேலும் திம்பம் மலைப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
இந்தகூண்டு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுத்தை நடமாட்டம் மற்றும் அதன் எச்சம் உள்ள பகுதியை கண்காணித்து அந்த இடத்தில் கூண்டு வைக்கப்படும் என்ற வனத்துறை அதிகாரிள் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:– வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் அ.தி.மு.க. பொத...
-
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள ...
-
திருப்பூர்,செப்.25- திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மகாராணி பட்டுச் சேலையை கலெக்டர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்து வைத்...
-
சேவூர் அருகே பொங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் டிராக்டர் ஓட்டுநர் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் திங்கள்க...
-
சிவகங்கை: மணல் கடத்திய லாரியை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.க்கு அடி, உதை விழுந்தது. இந்த சம்பவத்தால், மானாமதுரை அருகே பரபரப்பு தொற்றிக்கொண்டது. ...
-
இந்தியாவின் முதன்மை கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது என கேரளாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கோழிக்கோடு: கேரள மாநிலம் க...
-
கோபிசெட்டிபாளையம் ராகவேந்திரர் மடத்தில் வளரும் கலைஞர் R . முகுந்தன் அவர்களின் கர்னாடக சங்கீத பாட்டு கச்சேரி அரங்கேற்றம் நட...
0 comments:
Post a Comment