Thursday, August 14, 2014
தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் சாலையில் மோட்டல் உள்ளது. இதன்
இதுகுறித்து தாராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்–இன்ஸ்பெக்டர் இசாக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெண்ணின் முகம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் அவர் உடுத்தியிருந்த ஆடைகள் களைந்து அலங்கோலமாக காணப்பட்டது. எனவே அவரை மர்ம கும்பல் கற்பழித்து கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை சிதைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கொலையில் துப்பு துலக்குவதற்காக ஈரோட்டில் இருந்து மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று படுத்துக்கொண்டது. கோவையில் இருந்து தடயவியல் நிபுணர் தங்கவேல் வரவழைக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்தில் சிதறிக்கிடந்த வளையல் மற்றும் பொருட்களில் பதிவான ரேகைகளை பதிவு செய்தார்.
சம்பவ இடத்தில் வளையல்கள் உடைந்து சிதறிக்கிடப்பதால் அந்த பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுடன் போராடியிருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் அந்த பெண் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி, கொலுசு, தங்கத்தாலி, மெட்டி ஆகியவை அப்படியே இருக்கிறது.
எனவே நகைக்காக இந்த கொலை நடைபெறவில்லை என்பது ஊர்ஜிதமாகி உள்ளது. பெண் பிணமாக கிடந்த இடத்தில் ஒரு பை கிடந்தது. அதில் 4 சேலைகள் ரொட்டி, ஜாக்கெட் மற்றும் சில பொருட்கள் இருந்தது.
வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் மோட்டலில் நிறுத்தப்படுகின்றன. அப்போது சிலர் இதுதான் தாராபுரம் என இறங்கி விடுகின்றனர். பஸ் கிளம்பிய பின்னர்தான் இது பஸ் நிலையம் அல்ல என்பது அவர்களுக்கு தெரிய வருகிறது.
அதன் பின்னர் எங்கு செல்வது? என்று வழி தெரியாமல் நிற்கும் போது தான் சிலர் அவர்களை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்துச்சென்று நகை பறிப்பது மற்றும் பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.
காட்டில் பிணமாக கிடந்த பெண்ணின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் அகஸ்தியர் அரு...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது26). இவரது மனைவி பானுபிரியா(25). இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வே...
-
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் ஆகஸ்ட் 22-ஆம...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...

0 comments:
Post a Comment