Sunday, August 10, 2014
On Sunday, August 10, 2014 by farook press in Break, Coimbatore
விருதுநகர் மாவட்டம் மீனாகுளம் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் விஜயரங்கன். இவரது மகன் விஜயகுமார்(வயது 18). இவர் கோவை பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்து சென்ட்ரிங் வேலைசெய்து வந்தார்.
அவருடன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி(26) உள்பட சிலர் தங்கியிருந்தனர். நேற்று இரவு சாப்பிட்டதும் தூங்கச்சென்றனர். ஆனால் விஜயகுமார் உள்பட சிலர் தங்களது செல்போனில் படம் பார்த்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது முத்துப் பாண்டி 'எனக்கு தூக்கம் வருகிறது. நீங்கள் சத்தம் போடாமல் இருங்கள்’ என்றார். இதைத்தொடர்ந்து முத்துப்பாண்டிக்கும், விஜயகுமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் விஜயகுமார் ஆத்திரமடைந்து முத்துப் பாண்டியை தாக்கினார். அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். பின்னர் இருவரும் தூங்கச்சென்று விட்டனர். இருப்பினும் வயதில் குறைந்த விஜயகுமார் நம்மை தாக்கி விட்டானே என்ற ஆத்திரம் முத்துப்பாண்டியின் உள்மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.
இன்று அதிகாலை எழுந்த முத்துப்பாண்டி அங்கு கிடந்த சம்மட்டியை எடுத்து தூங்கிகொண்டிருந்த விஜயகுமாரின் முகத்தில் ஓங்கி அடித்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் உயிருக்கு போராடினார். விஜயகுமாரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் தூங்கிக்கொண்டிருந்த நண்பர்கள் பதறி எழுந்தனர்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஜயகுமாரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வரும் வழியிலேயே விஜயகுமார் பரிதாபமாக இறந்தார். தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டது குறித்து பீளமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய முத்துப்பாண்டியை தேடி வருகிறார்கள்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
