Saturday, August 16, 2014
போலீஸ் துறையில் புலன் விசாரணை பணியில் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் சுதந்திர தினத்தையொட்டி தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப்பதக்கங்கள் வழங்கப்படும். விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கம், ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசும் முதல்–அமைச்சர் வழங்குவார்.
கடந்த ஆண்டில் சிறப்பாக பணியாற்றியமைக்காக இந்த விருதுக்கு மதுரை திலகர்திடல் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011–ம் ஆண்டு தெப்பக்குளம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட காமராஜர் சாலையில் இளம்பெண் துர்காதேவி, மகன் ஸ்ரீராம் ஆகியோர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டனர். அந்த சம்பவம் தொடர்பாக கீரைத்துறையில் கிரைம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராஜன்பாபு தனி கவனம் எடுத்து விசாரணை நடத்தினார். அதில் சில மாதங்கள் கழித்து காளிமுத்து, முத்துப்பாண்டி, அலெக்ஸ்பாண்டியன் ஆகிய 3 குற்றவாளிகளை கைது செய்தார். 3 ஆண்டுகளாக துப்பு துலக்க முடியாமல் இருந்த சிக்கலான வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ததால் ராஜன்பாபு, இந்தாண்டிற்கான சுதந்திர தின முதல்வர் தங்கப்பதக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment