Thursday, August 14, 2014
மதுரை : ஆக்ஸிஜன் இன்றி நீலநிறமான குறைமாத குழந்தைக்கு, மதுரை வடமலையான்
மருத்துவமனையில் அரியவகை இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
டாக்டர் பி.ஆர்.ஜெ., கண்ணன், பச்சிளம் சிசு சிறப்பு டாக்டர் வினோத் கூறியதாவது: கர்ப்பத்தின் போது சர்க்கரை நோய் பாதிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட திருச்சி பெண்ணுக்கு 1.3 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது. ஆக்ஸிஜன் இல்லாத ரத்தம் குழந்தையின் உடலில் பாய்ந்ததால் நீலநிறமானது. உடலின் எடை குறைந்தநிலையில் (990 கிராம்) வடமலையான் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்தபோது, இருதய நான்கு அறைகளில் இடதுபக்க அறையில், நுரையீரலில் இருந்து இருதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய் அடைபட்டிருந்தது. இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் கலக்காமல், கெட்ட ரத்தம் குழந்தையின் உடலுக்கு சென்றது.
குழந்தையின் எடை ஒரு கிலோ அளவு கூட இல்லாததால், வழக்கமான கருவிகளைக் கொண்டு, சிகிச்சை அளிக்க முடியவில்லை. நரம்பை கண்டுபிடிப்பதே கடினமாக இருந்தது. தொடையின் ரத்தக்குழாய் வழியாக, 'ஆஞ்சியோபிளாஸ்டி' முறையில் பலுான் சிகிச்சை செய்து, ரத்தக்குழாய் திறப்பு சரிசெய்யப்பட்டது. 4 மாத கண்காணிப்புக்குப் பின், அக்குழந்தை 5 கிலோ எடையில், நன்றாக உள்ளது. இனி குழந்தைக்கு ரத்தக்குழாய் அடைப்பு வர 90 சதவீதம் வாய்ப்பில்லை. 10 சதவீதத்தில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டாலும் பிரச்னையில்லை. இந்தியாவில் எடை குறைவான குழந்தைக்கு இரண்டாவது முறையாக, இம்மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது, என்றனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் அகஸ்தியர் அரு...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது26). இவரது மனைவி பானுபிரியா(25). இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வே...
-
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் ஆகஸ்ட் 22-ஆம...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
0 comments:
Post a Comment