Tuesday, December 30, 2014
சேவூர் அருகே பொங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் டிராக்டர் ஓட்டுநர் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொங்கலூர் ஆதி திராவிடர் காலனியைச் சேர்ந்தவர் துரைசாமி (37). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, புளியம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில்அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து, புளியம்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், துரைசாமிக்கு தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டாதால் அவர் உயிரிழந்ததாகக் கூறியும், மருத்துவர் மீது உரிய நடவடிக்கை, உரிய நிவாரணத் தொகை வழங்கக் வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் பொங்கலூர் புளியம்பட்டி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் சேவூர் போலீஸார், வட்டாட்சியர் தேவமனோகரன் உள்ளிட்டோர் சமரசம் பேசினர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கவும், நிவாரணத் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
அவனியாபுரத்தை அடுத்த வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில், பெண் சடலமாகக் கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவனியாபுரத்தை அடுத்த...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் வி.ஏ.வி., பள்ளி இணைந்து, துாய்மை பாரத திட்டத்தில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் வ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
0 comments:
Post a Comment