Monday, December 22, 2014
திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெற வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்கு மூலமாக வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை எண் ஆகியவை சமையல்கியாஸ் ஏஜென்சி விநியோக மையங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் மாநகர் மாவட்டஇளைஞர் அணி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான சு.குணசேகரன், பாரத் கியாஸ் ஏஜென்சியுடன் இணைந்து திருப்பூர் வாலிபாளையம் மாநகராட்சி பள்ளியில் கியாஸ் மானிய பதிவு முகாம் நடத்த ஏற்பாடு செய்தார். அதன்படி கியாஸ் மானிய பதிவு முகாம் நடந்தது. திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன் பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க ஏற்பாடு செய்திருந்தார்.இதனால் ஒரே நாளில் 31-வது வார்டு பகுதியை சேர்ந்த 800 க்கும் அதிகமானோர் கியாஸ் மானியம் பெற பதிவு ,செய்தனர். இந்த முகாமில் பி.கே.எஸ்.சடையப்பன், சிவகுமார், மாப்பிள்ளை என்கிற வெங்கிடுபதி ஆகியோர் உள்ளிட்ட கியாஸ் ஏஜன்சி அலுவலர்கள் பங்கேற்றனர். வருகின்ற 23 ந் தேதி வாலிபாளையம் மாநகராட்சி பள்ளியில் மக்களின் முதல்வர் இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆலோசனையின் பேரில் கியாஸ் மானியத்துக்காக வங்கி கணக்கு துவங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...

0 comments:
Post a Comment