Wednesday, December 17, 2014
தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் இந்த ஆண்டுடன் முடிவடைவதால், புதிய குடும்ப அட்டைகள் வழங்க வேண்டியிருக்கிறது. எனினும் தற்காலிக ஏற்பாடாக வரக்கூடிய ஆண்டிற்கு உள்தாள் ஒட்டி பயன்படுத்த அரசு அறிவித்துள்ளது. இதன்படி உள்தாள் ஒட்டுதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் டிசம்பர் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டுவதற்கு, அந்த குடும்ப அட்டையின் புகைப்படத்தில் உள்ள குடும்பத் தலைவர் /தலைவி மட்டுமே நேரில் வர வேண்டும் என்று விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஏராளமானோர் உள்தாள் ஒட்ட இயலாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.
குறிப்பாக திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில், குடும்ப அட்டையின் புகைப்படத்தில் உள்ளவர்கள் மட்டுமே நேரில் வந்து உள்தாள் ஒட்டிச் செல்ல வேண்டும் என்ற உத்தரவு ஏராளமானவர்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்துகிறது. பலர் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
போலி குடும்ப அட்டைகளை தவிர்ப்பதற்காக இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குடுமைப்பொருள் வழங்கல் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் புதிதாக குடும்ப அட்டைகள் பெறும்போதே ஊழல் நடைமுறையை களைந்தால்தான் போலி அட்டைகளை ஒழிக்க முடியும். ஏற்கனவே பயன்படுத்தி வரும் குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும் நடைமுறையை கடுமையாக்குவதன் மூலம் போலி அட்டைகளை ஒழிக்க முடியாது. மாறாக, சாமானிய மக்களுக்கு வேலை இழப்பையும், அலைக்கழிப்பையும் தான் ஏற்படுத்தும்.
எனவே விதிமுறையை தளர்த்தி குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் வந்தால் உள்தாள் ஒட்டிக் கொள்ளலாம் என்றுஅறிவிக்க வேண்டும். ஏழை, எளிய சாமானிய மக்களின் வேலை இழப்பையும், அவர்கள் அலைக்கழிக்கப்படுவதையும் தவிர்க்க அதிகாரிகளுக்கு தமிழக அரசு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேட்டுக் கொள்கிறது.
என,
கே.காமராஜ்
மாவட்டச் செயலாளர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...

0 comments:
Post a Comment