Thursday, January 01, 2015
பகிர்க
ஆப்கானிஸ்தானில் திருமண வீட்டில் குழுமியிருந்தவர்கள் மீது ராக்கெட் விழுந்ததில் குறைந்தது இருபதுபேர் கொல்லப்பட்டனர்.
நாற்பதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இதில் பெண்களும் சிறு குழந்தைகளும் அடங்கும்.
ஆப்கானிஸ்தானின் தெற்கத்திய பிராந்தியமான ஹெல்மண்ட் பிராந்தியத்தில் திருமண விருந்து நடந்துகொண்டிருந்த வீட்டின் மீது இந்த ராக்கெட் விழுந்ததில் இந்த உயிரிழப்புக்கள் நடந்திருக்கின்றன.
மணமகளை வரவேற்பதற்காக விருந்தினர்கள் அந்த வீட்டிற்கு வெளியே குழுமிக்கொண்டிருந்த சமயத்தில் இந்த ராக்கெட் அங்கே விழுந்ததாக அந்த கட்டிட உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.
தனது குழந்தைகள் ஒன்பது பேரும் இதில் காணாமல் போயிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானின் ராணுவத்தினருக்கும் தாலிபன் தீவிரவாதிகளுக்கும் இடையில் புதன்கிழமையன்று நடந்த மோதலின்போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த நாடோ மற்றும் அமெரிக்காவின் தாக்கும் படைப்பிரிவுகள் கடைசியாக அங்கிருந்து வெளியேறிய நாளாகவும் நேற்று புதன்கிழமை இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment