Wednesday, March 11, 2015
திருப்பூர் பல்லடம் சாலை ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ., மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்பட மாநில நிர்வாகிகள், மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
சிறப்புப் பேரவை
இந்த மாநிலக்குழுக் கூட்டத்தையொட்டி திருப்பூரில் சிஐடியு சிறப்புப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்திலேயே மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ., மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், ஆர்.சிங்காரவேலு உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். இதில் வெண்மணி தியாகிகள் நினைவு இல்லத்திற்கு இரும்பு சேகரிப்பு நிதி வழங்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் பெருந்திரளான தொழிலாளர்கள் பங்கேற்கும்படி சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் கேட்டுக் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment