Wednesday, April 08, 2015
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ரூ 120 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது . மேலும் இப்பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ரூ .125 கோடியில் கல்லூரி மாணவியர் விடுதி ,பிற்பட்டோர் நலத்துறை மூலம் கல்லூரி மாணவியர் விடுதி ஆகிய கட்டடங்கள் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது . இப்பணிகளை மாவட்ட ஆட்சிதலைவர் திரு .கு .கோவிந்தராஜ் இ ஆ .ப .அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க உத்திரவிட்டார் . முன்னதாக உடுமலைபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் .அலுவலக பதிவேடுகளை பார்வையிட்டார் . மேலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்காக தார் ,டின் ,இரும்பு கம்பிகளின் இருப்புகளை பார்வையிட்டார் மேலும் அம்மா சிமெண்ட் மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தப்படும் சிமெண்ட் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ள குடோன்களை ஆய்வு செய்தார் . சிமெண்ட் குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சிமெண்ட் மூட்டைகளின் இருப்பு பதிவேட்டினை பார்வையிட்டார் கம்பி சிமெண்ட் ஆகியவற்றை வளர்ச்சி நடைபெறும் இடங்களுக்கு விரைந்து அனுப்பி வைத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார் . இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் [பொ ]ஊரக வளர்ச்சி முகமை திரு .ரூபன் சங்கர்ராஜ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் [வளர்ச்சி ] திரு .எஸ் .கார்த்திகை இரத்தினம் ,உடுமலை வருவாய் கோட்டாட்சியர் திரு .சாதனைக்குரள் ,ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்ப்பொறியாளர் திரு .நாகேந்திரன் ,வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் திரு .பழனிவேல் ,திரு .முகமது உசேன் ,உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் திரு .சைபுதீன் ,உடுமலை நகராட்சி ஆணையர் திரு .கெ .சரவணக்குமார் மற்றும் அரசு அலுவலகர்கள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...




0 comments:
Post a Comment