Tuesday, April 07, 2015
மதுரை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (ஏப்.7-ம் தேதி) இந்திரதனுஷ் தடுப்பூசித் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் விடுத்துள்ள
செய்திக்குறிப்பு: பிறந்தது முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு
அளிக்கப்படும் தடுப்பூசிகளில் ஏதேனும் விடுபட்டிருந்தால், அதை மத்திய
அரசின் இந்திரதனுஷ் திட்டத்தின் மூலம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரையில் செவ்வாய்க்கிழமை இம்முகாம் நடைபெறும்
இடங்கள்: அருள்தாஸ்புரம், செல்லூர், நரிமேடு, பீபிகுளம், கே.புதூர்,
சாத்தமங்கலம், முனிச்சாலை, பாலரெங்காபுரம், அனுப்பானடி, வில்லாபுரம்.,
சுந்தரராஜபுரம், பைக்காரா, பெத்தானியபுரம், திடீர்நகர், அன்சாரி நகர்,
புட்டுத்தோப்பு, அண்ணாத்தோப்பு.
முகாம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சத்துணவு
மையங்கள், அரசு, தனியார் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆகியவற்றில்
குழந்தைகளுக்கு ஊசி போடப்படும்.
குழந்தைகளுக்கு போடப்படும் ஊசிகள் விவரம்: குழந்தை
பிறந்தவுடன் பி.சி.ஜி., போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டிருக்கவேண்டும்.
ஒன்றரை மாதத்தில் பெண்டாவேலண்ட்02, போலியோ-2, மூன்றரை மாதத்தில்
பெண்டாவேலண்ட் 3, போலியோ 3, ஒன்பது மாதம் முடிவில் தட்டம்மை, ஜப்பானிஸ்
என்செபலைடிஸ் 1, ஒன்றரை வயதில் ஜப்பானிஸ் என்டிசபலைடிஸ் ஊக்குவிப்பு ஊசி,
ஒன்றரை வயதில் டி.பி.டி. ஊக்குவிப்பு ஊசி, தட்டம்மை ஊக்குவிப்பு ஊசி
அளிக்கப்பட்டிருக்கவேண்டும்.
கர்ப்பிணிகள் ஊசி: கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரணஜன்னி
முதல் தவணை, ஒரு மாதம் கழித்து மீண்டும் ரணஜன்னி இரண்டாவது தவணை, இத்தகைய
ஊசி போடாத கர்ப்பிணிகளுக்கு முகாமில் ஊசிகள் போடப்படும் என்றும் மாநகராட்சி
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment