Wednesday, February 26, 2020
காவல்துறையினருக்கு ராஜா என்கிற அழகர்சாமி எச்சரிக்கை.
பொறுமையாக இருக்கிறோம் இறங்கினால் தாங்க மாட்டீர்கள்.
திருச்சி மன்னார்புரம் அருகே தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிறுவனம் எல்ஃபின். இந்நிறுவனத்தின் மீது திருச்சி தஞ்சை மற்றும் பல்வேறு ஊர்களில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கடந்த வாரம் தஞ்சையில் லீடர் பிரசன்னா வெங்கடேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் இன்னும் ஜாமீன் கூட வெளிவர முடியவில்லை. இவருடன் கிங்ஸ்லி மற்றும்
சத்யபிரியா இருவரும் தலைமறைவு ஆனார்கள்.
( தற்போது இவர் ELFIN நிறுவனத்தில் உள்ள ஒரு vvip இடம் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் காவல்துறை நெருங்க முடியாத அளவிற்கு பாதுகாப்பில் இருப்பதாகவும் அவர்களது வட்டாரங்கள் கூறிவருகின்றது)
நேற்று காலை கிங்ஸ்லி என்பவர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரால் கைது செய்யப்பட்டார்.
கிங்ஸ்லி என்பவருக்கு அழகர்சாமி ( எ ) ராஜா மற்றும் ரமேஷ் என்கிற ரமேஷ்குமார் ஆகிய இருவருக்கும் மிகவும் நெருக்கமானவர். மேலும் எல்பின் நிதி நிறுவனத்தின் நிதி எங்கு எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது, யாரிடம் எல்லாம் உள்ளது என்ற விபரங்கள் அறிந்தவர் என கூறப்படுகிறது. இவர் கைது செய்யப்பட்டதால் காவல்துறையினர் அனைத்தையும் அறிந்து விடுவார்கள் என்பதால் கடும் அப்செட் ஆன ராஜா என்கிற அழகர்சாமி தங்களது வாட்ஸ்அப் குரூப்களில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார் அதில்
(கெட்டவர்கள் போராட்டம் நடத்தி பார்த்துள்ளார்கள் என்றால் போராட்டக்காரர்கள் அனைவரும் கெட்டவர்களா)
நாங்கள் ஒருவேளை சோற்றுக்கு வழி இல்லாதவர்கள், சாலையோரம் உள்ளவர்களை கோடீஸ்வரராக மாற்றி வருகிறோம். இது ஏன் காவல்துறைக்கு பிடிக்கவில்லை
( இவர்கள் நிறுவனத்தில் உறுப்பினராக 12,500/ 55,000/1 லட்சம் அதற்கு மேலும் பணம் இருந்தால் தான் உறுப்பினராகவே முடியும் ஒருவேளை சோற்றுக்கு வழி இல்லாதவர்கள் பிச்சைக்காரர்கள் எப்படி இவ்வளவு பெரிய தொகையை கட்டுவார்கள்🤔)
நாங்கள் பல கஷ்டங்களை சந்தித்து விட்டோம். காவல்துறை ,டிஐஜி,எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ அனைவருக்கும் இது பொய்யான வழக்கு என்று தெரிந்தும் பொய் வழக்கு பதிந்து உள்ளார்கள். இதைக் கேட்கப் போனால் லத்தி சார்ஜ் செய்கிறார்கள். நாங்கள் இதுவரை மிகவும் அமைதி காத்து வருகிறோம். நான் ஒருவரை வரச் சொன்னால் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து போராடக்கூடிய கூடியவர்கள் எங்கள் நிறுவனத்தினர்.
இனியும் நாங்கள் பொறுமை காக்க மாட்டோம் இனி எங்கள் உறுப்பினர்கள் யார் மீதாவது பொய்வழக்கு பதிந்தால் , டிஐஜி,எஸ்பி,டிஎஸ்பி,இன்ஸ்பெக்டர், எஸ்ஐ நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள் நாங்கள் இறங்கினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.
நீங்கள் இதற்காகத்தான் இந்தப் பணிக்கு வந்தீர்களா. உங்கள் ஆசிரியர்கள் உங்களுக்கு நல்லதை கற்றுத் தரவில்லையா ? அடுத்தவர்களை அடித்து வாழ்பவர்கள் .
நாங்கள் அறவழியில் செல்வதற்காக தான் அறம் மக்கள் நல சங்கம் தொடங்கினோம் இதேபோல் பொய்வழக்கு பதிந்தால் ... எங்கள் மக்கள் அமைதியான அவர்கள் நல்லவர்கள் அவர்கள் போராட முடிவெடுத்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். எதற்கும் துணிந்து விட்டேன். எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக எனது உயிரை வேண்டுமானாலும் கொடுப்பேன் என எல்பின் உறுப்பினர்களை கவரும் விதமாகவும் அந்த ஆடியோவில் பேசியுள்ளார். நீங்களும் வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் உங்களையும் வாழ வைக்கிறேன் என்று காவல்துறையினருக்கு லஞ்சம் தருவதாகவும் கூறியுள்ளார். இனியும் பொய் வழக்கு பதிவு செய்வதை கைவிடுங்கள் என காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் எல்பின் ராஜா என்கிற அழகர்சாமி ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்
இவர் மீது காவல்துறை டிஜிபி நடவடிக்கை எடுப்பாரா ?
அல்லது எல்பின் ராஜா சொன்னது போல் காவல்துறையினரை வாழ வைப்பாரா ?
பின்குறிப்பு :-
*ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின் நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர் மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*
*தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி டிச 17 கோரிக்கை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தெ...
-
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. தென் மண்டல அமைப்...
-
திருப்பூர்,பட்டாகேட்டு, 63 வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக...
-
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் பொதுமக்கள் உருவ பொம்மைக்கு நாமம் போட்டு வினோத ஆர்ப்பாட்டத்தை ம...
-
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இரு நாடுகளும் தங்கள் உறவுகளில் சாதாரணம...
0 comments:
Post a Comment