Thursday, February 13, 2020
திருச்சியில் காணாமல்போன மக்கள் நல சங்கங்கள் எங்கே? கருப்பு ஆடுகள்
களை எடுக்கப்படுமா ?
கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையரிடம் எல்பின் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் 45 பேர் எல்பின் நிறுவனம் ஏற்கனவே RMWC என்ற பெயரில் ஓர் நிறுவனம் நடத்தி வந்துள்ளனர் . இவர்களால் நாங்கள் பாதிப்படைந்து விட்டோம் நாங்கள் கட்டிய பணத்தை இது நாள் வரை அவர்கள் திருப்பிக் கொடுக்கவில்லை என புகார் அளித்தனர்.
அந்த புகார் மனுவை வைத்து திருச்சி மாநகர் முழுவதும் பொதுமக்கள் விழிப்புணர்வு அடையும் வகையில் ? அந்த மக்கள் நல சங்கத்தினரால் அரசு மற்றும் அரசு அதிகாரிகளை எச்சரிக்கும் வண்ணம் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி எல்பின் நிறுவன பங்குதாரர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். குற்ற பொருளாதாரப் பிரிவு காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்ட பொழுது உரிமையாளர்களான ராஜா என்கிற அழகர்சாமி ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் மற்றும் இவருடன் உள்ள எல்பின் பங்குதாரர்கள் எங்கு சென்றனர் ஆய்வின் போது எங்கே இருந்தனர்? இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது இவ்வழக்கு விசாரணை இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
(இதுபோன்று திருச்சி தில்லை நகர் பகுதியில் செந்தூர் பின்கார்ப் என்ற நிறுவனம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டது)
இந்நிலையில் பொதுநலன் கருதும் மக்கள் நல சங்கத்தை தான் வசப்படுத்தி விட்டதாகவும் மேலும் தன்னைப் பற்றி செய்தி வெளியிட்ட இரு முன்னணி நாளிதழுக்கு விளம்பரம் கொடுத்து வாயை அடைத்து விட்டதாகவும் மார்தட்டி வருகிறார்கள் அழகர்சாமி என்கிற ராஜா, ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்.
தற்போது எல்பின் நிறுவனத்தில் அடிக்கடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் நேற்று கூட தஞ்சை போலீசார் சோதனை மேற்கொண்டனர் இதில் எந்த முக்கிய ஆவணங்களும் சிக்க இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உரிமையாளர்கள் அங்கு இருப்பதில்லை.
இதற்கு காரணம் நேர்மையாக பணியாற்றும் காவல் துறையினர் இவர்களை ஆய்வுசெய்யும் பல்வேறு துறைகள் இடையே ஒரு சில கருப்பு ஆடுகள் எல்பின் நிறுவனத்திற்கு முன்னதாகவே தகவல் தருவதாக ஒரு சிலர் கூறுகின்றனர்.
இந்த கருப்பு ஆடுகளை தமிழக அரசும் திறன்பட செயல்பட்டுக் கொண்டிருக்கும் டிஜிபி களை எடுப்பார என பாதிப்படைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் எனக்கு கோடி ரூபாய் விலை பேசி அரசியல் பிரமுகர்களிடம் அழுத்தம் செய்வதாக வெளியில் கூறிக்கொண்டே திரிகிறார்கள் இது முற்றிலும் தவறான தகவல் இந்த மாதிரி பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது காவல்துறை மூலமாக தகுந்த நடவடிக்கை எடுப்பேன் மேலும் என்னிடம் உள்ள ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியுலகிற்கு கொண்டுவருவேன் இப்படிக்கு சத்தியமூர்த்தி ஜெய்ஹிந்த் என தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...





0 comments:
Post a Comment