Sunday, February 23, 2020
திருச்சியில் 6 லட்சம் ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பேருந்து பயணியர் நிழற்குடையை அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.
திருச்சி செந்தண்ணீ புரம் ஆஞ்சநேயர் கோவில் அருகே பேருந்து பயணியர் நிழற்குடை அமைத்து தர, திருச்சி சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய பேருந்து பயணியர் நிழற்குடையை கட்டினார். 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அந்த பேருந்து பயணியர் நிழற்குடையை அவர் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும் போது....... நான் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் மக்கள் என்னிடம் வைக்கும் பத்து கோரிக்கைகளில் என்னால் முடிந்த இரண்டு, மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன். திமுக ஆட்சி அமையும்போது பத்துக்கு பத்து என அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றித் தருவேன் என்றார். இவ்விழாவில் பகுதி செயலாளர் தர்மராஜ், வட்டச்செயலாளர்கள் ரெங்கநாதன், சண்முகம், துரை, வரதராஜன், மணி, தவசீலன் தங்கவேல் , செல்வராஜ், இளைஞரணி ஜோஸ்வா, செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி டிச 17 கோரிக்கை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தெ...
-
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. தென் மண்டல அமைப்...
-
திருப்பூர்,பட்டாகேட்டு, 63 வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக...
-
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் பொதுமக்கள் உருவ பொம்மைக்கு நாமம் போட்டு வினோத ஆர்ப்பாட்டத்தை ம...
-
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இரு நாடுகளும் தங்கள் உறவுகளில் சாதாரணம...
0 comments:
Post a Comment