Saturday, April 18, 2020
On Saturday, April 18, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
முசிறி அருகே விழுப்புரத்திற்கு நடந்து சென்ற கூலித் தொழிலாளர்களுக்கு உதவிய சமூக ஆர்வலர்கள்.நாமக்கல் மாவட்டம், பவுத்திரம் கிராமத்தில் இருந்து விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஐந்து பேர் விழுப்புரத்திற்கு நடந்து சென்றனர்.
இவர்களை கண்ட சமூக ஆர்வலர்கள் உணவு வாங்கிக் கொடுத்து விழுப்புரத்துக்கு அழைத்து சென்று உதவிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விழுப்புரம் அருகே உள்ள திருக்கோயிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி (65) ,விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் மனைவி மற்றும் மகளுடன் நாமக்கல் மாவட்டம் ,பவுத்திரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர் .தற்போது வைரஸ் பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லதம்பி வேலை வாய்ப்பின்றி சிரமப்பட்டு உள்ளார். போக்குவரத்து தடை செய்யபட்ட நிலையில் விழுப்புரம் அருகே உள்ள சொந்த ஊரான திருக்கோயிலூர் சென்றுவிட கூலித் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து 5 பேரும் நடை பயணமாகவே விழுப்புரத்திற்கு செல்ல தீர்மானித்து பயணத்தை தொடங்கினர். சுமார் 150 கிலோ மீட்டர் நடை பயணத்திற்கு தயாரான தொழிலாளர்கள் மனதில் இருந்த நம்பிக்கை அளவிற்கு உடலில் தெம்பில்லாமல் மிகுந்த சோர்வுடன் திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தா.பேட்டையில் நடந்து சென்றுள்ளனர். இவர்களை பார்த்த போலீசார் அதே பகுதியில் செயல்பட்டு வரும் வாசவி கிளப் சமுக தொண்டு நிறுவணத்தின் உதவியுடன் உணவு வாங்கிக் கொடுத்து ஆம்னி வேனை வாடகைக்கு எடுத்து விழுப்புரம் அருகே உள்ள திருக் கோவிலூர் கிராமத்தில் கொண்டு விடுவதற்கு ஏற்பாடு செய்தனர். கூலித் தொழிலாளர்கள் வாழ்வதற்கு வழி இல்லாத நிலையில் சொந்த ஊர் திரும்புவதற்கு உதவிய தா.பேட்டை போலீசார் மற்றும் வாசவி கிளப் குழுவினர்களுக்கு கூலித்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...


0 comments:
Post a Comment