Monday, June 15, 2020
On Monday, June 15, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் கூட்டம் வராத நிலையில் அவை தொடர்ந்து இயக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் நேரமும் மாற்றப்பட்டுள்ளது
கடந்த 12-ஆம் தேதி முதல், தினமும் சூப்பர்ஃபாஸ்ட் இன்டர்சிட்டி சோழன் எக்ஸ்பிரஸ் காலை 6.30 மணிக்கும், பல்லவன் எக்ஸ்பிரஸ் காலை 7 மணிக்கும் திருச்சியிலிருந்து அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டு வரை இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் முறையே 14 மற்றும் 16 பெட்டிகள் உள்ள நிலையில் முதல் 2 பெட்டிகளில் மட்டும் நூற்றுக்கும் குறைவான பயணிகள் பயணிக்கின்றனர்.
மற்ற பெட்டிகள் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. பயணிகள் முகக் கவசம் அணியவும், உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு தனி நபர் இடைவெளியுடன் அமரவும் அறிவுறுத்தப்படும் நிலையில் பெரும்பாலானோர் இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் நாளை முதல் திருச்சி-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு - திருச்சி, கோவை-அரக்கோணம் இடையே 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு - திருச்சி இடையே இயக்கப்படும் ரயில் விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக செல்லும் இயங்கி வருகிறது.
இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மாலை 2 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு திருச்சி வந்து சேரும், பின்னர் திருச்சியில் இருந்து காலை 06.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.40 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.
இந்நிலையில், நாளை முதல் இந்த சிறப்பு ரயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு திருச்சி சென்று வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி டிச 17 கோரிக்கை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தெ...
-
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. தென் மண்டல அமைப்...
-
திருப்பூர்,பட்டாகேட்டு, 63 வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக...
-
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் பொதுமக்கள் உருவ பொம்மைக்கு நாமம் போட்டு வினோத ஆர்ப்பாட்டத்தை ம...
-
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இரு நாடுகளும் தங்கள் உறவுகளில் சாதாரணம...
0 comments:
Post a Comment