Friday, July 08, 2022
On Friday, July 08, 2022 by Tamilnewstv in Trichy reporter r.sabarinathan
வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி கணவன் மனைவியை கொலை வெறி தாக்குதல்
திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை அம்பலக்காரர் தெரு பகுதியில் வசித்து வருபவர் ஜான் பீட்டர் இவரது மனைவி சகாய மேரி. இவர்களுடன் சகாய மேரியின் தந்தையும் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் முத்துமாணிக்கம் வயது 35 இவருக்கும் ஜான் பீட்டருக்கும் இடையே சொத்து பிரச்சினை சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஜான் பீட்டர் தனது வீட்டில் இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மார்க்கெட் சென்றபோது அவரை வழிமறித்த முத்து மாணிக்கம் வழக்கை வாபஸ் வாங்க கோரி தகராறில் ஈடுபட்டுள்ளார்.மேலும் அருகில் கிடந்த கல்லைக் கொண்டு ஜான் பீட்டர் முகத்தில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஜான் பீட்டர் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து தன்னை தாக்கிய முத்துமாணிக்கம் மீது புகார் அளித்தார். இந்நிலையில் ஜான் பீட்டர் காவல் நிலையத்தில் தன் மீது புகார் அளித்ததை அறிந்து கொண்ட முத்துமாணிக்கம் மற்றும் அவரது நண்பர் முத்தையன் ஆகியோர் ஜான் பீட்டரை தேடி அவரது வீட்டிற்கு வந்தனர். ஜான் பீட்டர் வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் அவரது வீட்டை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மேலும் அவரது மனைவி சகாய மேரியை தாக்கி இரும்பு கடப்பாரையால் கை மற்றும் வயிற்றில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அறிந்து வந்த ஜான் பீட்டர் உடனடியாக தனது மனைவியை திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கடப்பாரையால் வயிற்றில் குத்தியதில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.கொலை வெறியுடன் கணவன் மனைவியை தாக்கிய முத்துமாணிக்கம் மற்றும் அவரது நண்பர் முத்தையன் ஆகியோரை கைது செய்யக்கோரி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் ஜான் பீட்டர் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் இதில் முத்தையன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முத்து மாணிக்கம் தற்போது தலைமுறைவாகியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...

0 comments:
Post a Comment