Sunday, September 30, 2018

On Sunday, September 30, 2018 by Tamilnewstv   
திருச்சி      29.09.18

மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை பாதியாக குறைக்க வேண்டும்-திருச்சியில் எல்.ஜே.டி. மாநில பொதுச் செயலாளர் ஜான் குமார் பேட்டி


ஜனநாயக ஜனதாதளம் (எல்.ஜே.டி.) நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் ராஜகோபால் தலைமையில் இன்று நடந்தது. இதில் மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மாநில பொது செயலாளர்கள் வையாபுரி, ஹேமநாதன், இப்ராம்பால், மாவட்ட தலைவர்கள் அறிவழகன்,  உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாலை திருச்சி அண்ணா சிலை அருகே ஆர்பாட்டம் நடைப்பெற்றது.


இந்திய அரசு போர் விமானங்களை வாங்குவதில் மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது. இதில் மோடி ஊழல் நடைபெறவில்லை என்று நிரூபிக்க பாராளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவிடம் புலனாய்வு செய்ய ஒப்படைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு 100 முறை உயர்ந்துள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள் வரியை பாதியாக குறைக்க வேண்டும். அப்படி குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும். 1838–ல் கட்டப்பட்ட முக்கொம்பு அணை உடைந்து விட்டது. இதில் புதிய அணை கட்ட சர்வதேச அளவில் மிகப்பெரிய தொழில் நுட்பம் கொண்டதாக டெண்டர் விட வேண்டும். இல்லையென்றால் வழக்கு தொடர்வோம். மேலும் மணல் கொள்ளையை தடுக்க 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை என தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

வருடத்திற்கு 10 லட்சம் பேருக்கு வேலை என கூறி மத்திய அரசு ஏமாற்றிவிட்டது. மத்திய மாநில அரசுகள் விவசாயிகள் நலன் கருதி டாக்டர் சாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட வேண்டும். விரைவில் மழைக்காலம் வர இருப்பதால் ஏரி குளங்களை தூர் வார வேண்டும்.

திருச்சி மாநகராட்சியில் அதிக அளவில் ஊழல் நடந்துள்ளதாக தெரிய வருகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
On Sunday, September 30, 2018 by Tamilnewstv   
திருச்சி_30.09.18

எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.



திருச்சி எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளையின் பொது செயலாளர் skd. பாண்டியன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கருவாட்டு பேட்டை மற்றும் வீரமாநகரம் பகுதிகளில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் பிளாஸ்டிக்கின் அபாயம் குறித்து

விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இப்பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பையை உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறி துணிப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் நமசிவாயம், மாவட்ட தலைவர் சங்கர், மாவட்ட செயலாளர் நாகராஜ், மாவட்ட துணை தலைவர் ராஜா, மாவட்ட பொருளாளர் ஜெய்க்கி, செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
On Sunday, September 30, 2018 by Tamilnewstv in ,    
*திருச்சி சமயபுரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் 8 பேர் உயிரிழப்பு*


   
திருச்சி சமயபுரம் அருகே சுங்கச்சாவடி யில் சாலையோரத்தில் நின்றிருந்த இரும்பு ஏற்றி வந்த லாரி மீது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த   கார் லாரி மீது மோதிய விபத்தில் காரில் பயணித்த 13 பேரில் , 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.



திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலையில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள், 3 பெண்கள் ம ற்றும் 3 ஆண்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

       
        சென்னை மேடவாக்கம் விஜய், மஞ்சுநாதன் கந்த சாமி, பாலமுருகன் சுப்ரமணி, ஜெயலட்சுமி, பாக்கி லட்சுமி, கவிதா உட்பட 13பேர் பேட்ட வாய்த் தலை அருகே வீடு வாங்கியதை ஸ்கார்ப்பியோ காரில் பார்க்க வந்தனர். 22 டன் எடையுள்ள இரும்பு லோடு ஏற்றிக் கொண்டு ஆந்திர மாநிலம் நெல்லுரில் இருந்து வந்த லாரி, திருச்சி சமயபுரம் அருகே நெம்பர் 1 டோல்கேட் பகுதியில் இரும்பு லோடுடன் நின்று கொண்டிருந்தது.
மேடவாக்கத்தில் இருந்து வந்த கார், அதிகாலை 4.15 மணிக்கு மோதி விபத்துக்குள்ளானது.
சுமார் மூன்றரை மணி நேரம் மீட்பு பணி நடந்தது.
விபத்தில் 3 ஆண், 3 பெண்கள்,  2 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த டோல்கேட் பகுதியில் இரவு நேரத்தில் விளக்குகள் எரிவதில்லை. மேலும், அதே பகுதியில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்துவதால் தான் லோடு வாகனங்கள் இந்த இடத்தில் நிறுத்தப்படுகின்றன. அதனால் தான் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. என்பது இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு .
கார் ஒட்டி வந்தவர் தூக்க கலக்கத்தில் வந்ததால் தான் விபத்து நிகழ்ந்த தாகவும் கூறப்படுகிறது.
 பரிதாபமாக உயிரிழந்தனர்.

Saturday, September 29, 2018

On Saturday, September 29, 2018 by Tamilnewstv in ,    



தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க
போட்டி.



கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு



      திருச்சி மாவட்டம்  சமயபுரம்அருகே தனலட்சுமி சீனிவாசன்தொழில்நுட்ப பொறியியல்கல்லூரியில் அண்ணாபல்கலைக்கழகம் சார்பில் தேசியஅளவிலான போட்டியில் பங்குபெறுவதற்காகமண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி நடைபெறுகிறது.










     
 இப்போட்டியில் திருச்சி, தஞ்சாவூர்,அரியலூர், பெரம்பலூர் என தமிழகம்முழுவதும் உள்ள  பல்வேறுகல்லூரிகளிலிருந்து ஆண்கள்பிரிவில் 18 அணிகளும், பெண்கள்பிரிவில் 19 அணிகளும் பங்கேற்றன. 5 சுற்றுகளாக நடைபெறும். சேலம்மற்றும் திருச்சி சதுரங்க சங்கத்தைச்சேர்ந்த 5 பேர் நடுவர்களாக செயல்பட்டனர்.இப்போட்டியில்வெற்றி பெறும்மாணவ,மாணவிகளுக்குபரிசுகளும், சான்றிதழ்களும்வழங்கப்படுகிறது.



இப்போட்டியில் வெற்றிபெறுபவர்கள் நாளை தனிப்பிரிவில்பங்கு பெறுவார்கள். அதில் வெற்றிபெறுபவர்கள் தேசிய அளவிலானபோட்டிகளில் பங்கு பெறுவதற்குதகுதி பெறுவார்கள் என்பதுகுறிப்பிடதக்கது..

Wednesday, September 26, 2018

On Wednesday, September 26, 2018 by Tamilnewstv   
தூய வளனார் தன்னாட்சி கல்லூரியில் அண்ணல் காந்தியடிகள்          
அஞ்சல் தலை கண்காட்சி


மகாத்மா காந்தி 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் அஞ்சல் தலை மூலம் அறிவோம் காந்தியை என்ற தலைப்பில்  மகாத்மா காந்தி தபால் தலை கண்காட்சி மாணவர்கள் அனைவரும் மகாத்மா காந்தி வரலாற்றினை, சிந்தனைகளை, அறத்தினை, அகிம்சா வழியினை அறியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் அருட்தந்தை முனைவர் ஆண்டனி பாப்புராஜ் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் சுவக்கின், ஆண்டனி சேசுராஜா, ஜஸ்டின் கோவில் பிள்ளை, வைரப் பெருமாள், ஆரோக்கிய தன்ராஜ், துளசி பாரதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

 இந்தியா, ஆப்கானிஸ்தான்,  பங்களாதேஷ், பூட்டான், கியூபா, நேவிஸ், காம்பியா, கிரநாடா, சார்ஜா, மாசிடோனியா , பலாவு, ருமேனியா, தென் ஆப்ரிக்கா, சுரிநாம், வெனிசுலா, மாசிடோனியா , காங்கோ, கானா, கினியா- பிஸ்சாசு, மடகஸ்கர்,  அயர்லாந்து,  ஈரான், யுனைடட் ஸ்டேட்ஸ் அமெரிக்கா, ஜாம்பியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின்    தபால் தலைகளை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி அதன் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாராம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.
 கண்காட்சியில் சுதந்திர இந்தியா அஞ்சல் தலைகளில் 1948 ஆம் ஆண்டு வெளியிட்ட காந்தி தபால் தலைகள், (1869 - 1969) காந்தி நூற்றாண்டு தபால் தலைகள், காந்தி, நேரு, தண்டி யாத்திரை, 125 வருட காந்தி தபால் தலை, 50வது ஆண்டு நினைவார்த்த தபால் தலை, உப்பு சத்தியாகிரகம், 25, 30, 35, 50, 60 காசுகள் 1ரூபாய் பொது பயன்பாடு தபால் தலைகள்,
  காட்சி படுத்தப்பட்டது. காந்தி நூற்றாண்டிற்காக வெளியிட்ட புகைப்பட அஞ்சல் அட்டைகள், இன்லென்ட் கடிதம், விமான அஞ்சல் கடிதம் காட்சிப்படுத்தப் பட்டது.
 மேலும் கரம்சந்த் காந்தி புத்திலி பாய் அம்மையாருக்கும்   1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத் போர்பந்தரில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை போர்பந்தரில் பயின்று ராஜ்காட் கத்தியவார் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் அப்பள்ளி ஆல்பர்ட் உயர்நிலைப் பள்ளி என பெயர் மாற்றம் பெற்றது. பதிமூன்றாம் வயதில் கஸ்தூரிபாயைத் திருமணம் செய்தார். 1889 முதல் 1893 ஆம் ஆண்டு காலங்களில் லண்டனில் சட்டம் பயின்றார். 1893 - 1904 காலங்களில் தென் ஆப்ரிக்கா செல்லும் போது அங்கு இருந்த நிறவெறி , அதிர்ச்சியை தந்தது. பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் நிறவேற்றுமையால் காந்தி கீழே தள்ளிவிடப்பட்ட நிகழ்வும் நடைபெற்றது. அற வழியில்,அகிம்சை வழியில் சத்தியாகிரகப் போராட்டம் தென்னாப்பிரிக்காவில் 1904-1914 காலங்களில் நடைபெற்றது. 1915 காந்தி இந்தியா வந்தடைந்தார். இரவீந்திர நாத் தாகூர் அவரை மகாத்மா என்று அழைத்தார். 1922ல் காந்திக்கு ஆறாண்டு சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டு 1924 ஆண்டு விடுதலை அடைந்தார். டிசம்பரில் பெல்காமில் தேசிய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.1930 - 1942 காலங்களில் உப்பு வரிக்கு எதிராக சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார். 1930 மார்ச் மாதம் காந்தி 78 பேருடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து அரபிக் கடலின் கரையோரத்தில் இருந்த தண்டிக்கு 241 மைல் தூர பாதயாத்திரையை மேற்கொண்டார். 25 நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 5ஆம் நாள் தண்டியை அடைந்தார். ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 6.30 மணியளவில் ஒரு கையளவு உப்பை உலர்ந்த உப்பங்கழியிலிருந்து எடுத்து உப்புச் சட்டத்தை மீறினார். 1939ல் இரண்டாவது உலக யுத்தம் மூண்டது. 1947 மார்ச் பிரிட்டிஷ் அரசு பிரபு மவுண்ட்பேட்டனை வைஸ்ராயராக இந்தியாவிற்கு அனுப்பி ஆகஸ்ட் 15 விடுதலை அளிப்பதாக முடிவெடுத்தது. 1948 ஜனவரி 30 தேதி அன்று பிர்லா மாளிகைக்கு மனு, அபா இரண்டு பேத்திகளின் தோள்கள் மீது கரங்களை வைத்து மாலை 5.13 மணிக்கு பிரார்த்தனை இடத்திற்கு வந்தார். கூட்டத்தில் நாது ராம் விநாயக கோட்சே காந்தி மார்பில் மூன்று முறை சுட்ட போது ஹேராம் எனக் கூறி கீழே விழுந்தார். உடல் தகனம் செய்யப்பட்ட  ராஜ்காட்டில் காந்தியின் சமாதியில் கடைசி வார்த்தையான ஹேராம் வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது என 1869 - 1948 மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றினை எடுத்துரைக்கும் வகையில் உலக நாடுகளில் பொது பயன்பாடு, நினைவார்த்த அஞ்சல் தலை, மினியேச்சர், செட் அ நெட், புகைப்பட அஞ்சல் அட்டை உட்பட இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல் தலைகள், முதல் நாள் உறைகள், சிறப்பு உறைகள் காட்சிப்படுத்தப் பட்டு மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறும், சிந்தனை கருத்துகளும் மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் யோகாசிரியர் விஜயகுமாரால் எடுத்துரைக்கப் பட்டது
On Wednesday, September 26, 2018 by Tamilnewstv   


ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியர்களின் அட்டூழியங்கள் என சிவப்பு வண்ணத்தில் Atrocities in Indian occupied kashmir என வெள்ளை எழுத்துக்களால் அச்சிடப்பட்டு பாகிஸ்தான் தபால் தலையினை 13 ஜூலை 2018ல் 20 தபால் தலைகளை வெளியிட்டுள்ளது.

 1 வரிசைக்கு 5 தபால் தலைகள் வீதம் 4 வரிசையில் 20 தபால் தலைகள் கொண்ட நினைவார்த்த தபால் தலைகள் கொண்ட ஒரு தாளாக வெளிவந்துள்ளது. ஒவ்வொரு தபால் தலையும் உள்ளுர் மதிப்பில் ரூ 8 மதிப்புடையதாகும். 20 தபால் தலைகள் $6.99 சுமார் ரூ 500 மதிப்பாகும். தபால் தலை இடதுபுறம் ஒவ்வொரு தபால் தலையிலும் ஒவ்வொரு தலைப்பு இடம் பெற்றுள்ளது. ரசாயண  ஆயுதங்களை பயன்படுத்துதல், விதவைகள், குழந்தைகள் துஷ்பிரயோகம், போலி என்கவுண்டர், சுதந்திரத்திற்கான பிரார்த்தனை, துளைக்கும் துப்பாக்கிகளை பயன்படுத்துதல், பெண்களை துன்புறுத்துதல், காணாமல் போனவர்கள், வெகுஜனத்தின் கல்லறைகள், ஒரு லட்சம் காஷ்மீரிகளின் உயிர் தியாகம், பர்கான் வானி 1994-2016 சுதந்திர சின்னம்,காஷ்மீரில் ரத்தம் வடிதல், கொலையாளிகளிடம் இருந்து பாதுகாத்தல், பின்னல் வெட்டுதல், வீடற்ற குழந்தைகள், சுதந்திர போராட்டம், மிருகத்தனம், பெண்களை சித்ரவதை செய்தல் என ஆங்கிலத்தில் மஞ்சள் வண்ணத்தில் எழுத்தும் தலைப்பிற்கேற்ற புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. தபால் தலைகள் இடது மேற்புறம் பாகிஸ்தான் எனவும் Rs 8 எனவும் அச்சிடப்பட்டுள்ளது. நேஷனல் செக்யூரிட்டி பிரிண்டிங் கம்பெனி என தபால் தாள் கீழே அச்சிடப்பட்டுள்ளது. இத் தபால் தலை இ-பே மற்றும் பிற வர்த்தக வலைதள நிறுவனத்தில் விற்கப்படுகிறது
.
ஒரு நாட்டின் அஞ்சல் தலையானது அந்நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, அறிவியல், கண்டுபிடிப்பு என அமையும். ஆனால், இத் தபால் தலை அண்டை நாடான நம் இந்தியாவின் பெருமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. இத் தபால் தலையினை பாகிஸ்தான் திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மகாத்மா காந்தி 150 வது பிறந்த நாளை முன்னிட்டு 150 இடங்களில் இலவசமாக மகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி நடத்தி காந்திய சிந்தனைகளை எடுத்துரைத்து வரும் மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் விஜயகுமார் கேட்டு கொண்டுள்ளார்.
On Wednesday, September 26, 2018 by Tamilnewstv in ,    
அகில இந்திய முகம்,  தாடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று செப்டம்பர் 26 புதன்கிழமை காலை 6 மணிக்கு திருச்சியில் நடைபெற்றது.



திருச்சி உழவர்சந்தை மைதானத்தில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்பணர்வு நிகழ்ச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில், கோர்ட் எம்.ஜி.ஆர் சிலை வழியாக மீண்டும் ஆரம்ப இடத்திற்கு வந்தனர்.


இதில்
தலைக்கவசம் அணிந்து கொள்ளாமலும்,  செல்லிடப்பேசியைப் பயன்படுத்தி இருசக்கர வாகனம் ஓட்டுவதாலும் ஏற்படும் விபத்துகளால் முகத்தில் எலும்பு முறிவு மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது.  இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சாலை விபத்துகள் அதிகம் நடப்பதாக ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், புகையிலை மற்றும் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதால் வாய் புற்றுநோய் நோய் ஏற்பட்டு. முகம் பாதிக்கப்படுவது குறித்தும்,  பிறவிக் குறைபாடு காரணமாக முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைக் உயர்தர நவீன சிகிச்சை முறைகளால் சீரமைக்க முடியும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. தமிழ்நாட்டில்  திருச்சி தவிர திருநெல்வேலி,  மதுரை,  கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இது போன்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இம்மாதம் நடைபெற்றது.



மேலும் அடுத்த அக்டோபர் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அகில இந்திய முக சீரமைப்பு நிபுணர்கள் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கை இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யநாயுடு தொடங்கி வைக்கிறார்.
 கன்னியாகுமரியில் தொடங்கிய மாரத்தான் போட்டியை தமிழ்நாடு முக சீரமைப்பு நிபுணர்கள் சங்கத் தலைவர் டாக்டர் எம்.வீரபாகு தொடங்கிவைத்தார்.
.


திருச்சியில் நடைபெற்ற மராத்தான் ஓட்டத்தில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் திருச்சியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இருந்த பணியாளர்கள்  கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை திருச்சி வாய் நோய் , முக , தாடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஏற்பாடு செய்து இருந்தனர்.

Tuesday, September 25, 2018

On Tuesday, September 25, 2018 by Tamilnewstv   
மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா 13-ம் நாளை முன்னிட்டு பிள்ளையாருக்கு  27-வகை அபிஷேகம்


மலைக்கோட்டை

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி இன்;று மதியம் மாணிக்க விநாயகர் கோவிலில் உற்சவ விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு நடன கணபதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மலைக்கோட்டை கோவில்
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலை உச்சியில் உச்சிப்பிள்ளையாரும் மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.



விநாயகர் சதுர்த்தி
முழு முதற்கடவுள் என்று போற்றப்படும் விநாயகர் எல்லா வகையான துன்பங்களையும் போக்கும் ஆற்றல் படைத்தவர். விநாயகரை வழிபட்டால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் கிரக தோஷங்கள் நீங்கும் செல்வ செழிப்பு உண்டாகும். நல்ல கல்வி கிடைக்கும்.  “ஓம் கம் கணபதியே நம” என்பது விநாயகர் நாமம். இந்த நாமத்தை அன்றாடம் 3 முறையோ அல்லது 111 முறையோ சொன்னால் வாழ்க்கையில் அனைத்தும் கிடைக்கும் என்;பது நம்பிக்கை.  அழகிற்கு முருகன் அறிவுக்கு கணபதி (விநாயகர்) என்று அனைவராலும் சொல்லப்படுகிறது.
இந்த பிள்ளையாருக்கு ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் வளர்பிறையில் வரும் சதுர்த்தியன்று விநாயகர் சதுர்த்தி (விநாயகர் பிறந்த நாள்) அமாவாசை முடிந்த 4-வது நாள்  கொண்டாடப்படுகிறது.
ராட்சத கொழுக்கட்டை
இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை  முன்னிட்டு மலைக்கோட்டை உச்சி விநாயகர் மாணிக்க விநாயகருக்கு  150 கிலோ எடை கொண்ட மிக பிரமாண்ட ராட்சத கொழுக்கட்டை  தயாரிக்கப்பட்டு  உச்சிப்பிள்ளையாருக்கும் மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோவாக பிரித்து தொட்டில் கட்டி தூக்கி சென்று படையல் போட்டு பக்தர்கள் அனைவருக்கும் கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை உச்சி விநாயகர்  மாணிக்க விநாயகர் கோவிலில் கடந்த 13-ம்தேதி தொடங்கி விநாயகருக்கு ஒவ்வொரு நாளும் உபயதாரர்களை கொண்டு மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவ கணபதிக்கு பால கணபதி நாகாபரண கணபதி  லஷ்மி கணபதி
தர்பார் கணபதி பஞ்சமுக கணபதி மூசிக கணபதி இராஜ கணபதி மயூர கணபதிகுமார கணபதி வல்லப கணபதி ரிஷபாருட கணபதி சித்தி புத்தி கணபதி  என 12 நாட்கள் மாலை 6 மணிக்கு அலங்காரம் செய்யப்பட்டு  அபிஷேகம் நடைபெற்றது.
27 வகை அபிஷேகம்
 இதில் 13-ம் நாளான இன்று பகல் 12 மணிக்கு மாணிக்க விநாயகர் கோயில் மண்டபத்தில் உற்சவ கணபதிக்கும் மாணிக்க விநாயகர் மூலவருக்கும்  திருச்சி சாரதாஸ் சார்பில் விபூதி சந்தனாதி தைலம் திரவிய பொடி அரிசி மாவு நெல்லி முல்லி பொடி மஞ்சள் பொடி குங்குமம் தேன் நெய் பஞ்சாமிர்தம் பால் தயிர் எலுமிச்சம்பழம் சாத்துக்குடி கரும்புசாறு திராட்சை விளாம்பழம்  மாதுளை அன்னாசிப்பழம் முப்பழம் பழவகைகள் அன்னாபிஷேகம் வெந்நீர் இளநீர் சந்தனம் சொர்ணாபிஷேகம் பன்னீர்  உள்ளிட்ட 27 வகையான அபிஷேகமும் அதை தொடர்ந்து நடன கணபதிக்கு சிறப்பு அலங்காரமும்  நடைபெற்றது.
14-ம் நாளான நாளை (புதன் கிழமை) காலை 11 மணிக்கு மூலவர் உற்சவருக்கு திருக்கோயில் பணியாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் லட்சார்ச்சனையும் நடைபெற்று விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
 ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் 

Saturday, September 22, 2018

On Saturday, September 22, 2018 by Tamilnewstv in    
திருச்சி_22.09.18

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் வருந்தத்தக்க வகையில் உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கவலை தெரிவித்தார்

திருச்சி நவலுர் குட்டப்பட்டுவிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் சர்வதேச மாநாடு நடைபெற்றது.  பாலின சமத்துவத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ நாடுகளை சேர்ந்த பேராசிரியர்கள், தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.





இந்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பேசும்போது......

நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது, பெண்கள் முன்னேற்றத்திற்கான பல அம்சங்களை கொண்டுள்ளது. அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சட்டங்களோடு, பெண்களை சமுதாயத்தில் முன்னேற்றி விடுவதற்கான பல அம்சங்களை கொண்டுள்ளது. சமத்துவத்தில் முன்னோடி மாநிலமான தமிழகத்திலும் கூட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து வெளியாகும் செய்திகள் வருந்தத்தக்க வகையில் உள்ளது. அதே சமயம் தமிழகத்தின் சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் மொத்தம் உள்ள 62 நீதிபதிகளில் 12 பேர் பெண்களாக கடந்த ஆண்டு இருந்து வந்தனர்.

நான் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த போது, இந்த சிறப்பு நிலவியது. ஆனால் இதுவும் கூட ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவானதாகும். இந்திய நீதித்துறையின் உயர் பதவியில்  பெண்கள் அதிகளவில் வரவேண்டும். இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் 3 பெண்கள் நீதிபதிகளாக பதவி ஏற்றது இதுவே முதல்முறையாக உள்ளது. நாட்டில் இயற்கை வளங்கள் அதிகளவில் சுரண்டப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகளவில் நடைபெறுவதால் வெள்ளம் போன்ற இயங்கை சீற்றங்கள் ஏற்படுகிறது. இவை நீடித்த வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இவற்றை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.  பாலின சமநிலை நிலவும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் வருந்தத்தக்க வகையில் உள்ளது.

 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகளிடையே நடைபெற்ற மாநாட்டில் 17 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்கள் 2030ம் ஆண்டிற்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஏழ்மை, பசி ஒழிப்பு, அனைவருக்கும் சுகாதாரம், தரமான கல்வி, பாலின சமத்துவம் இவை எல்லாவற்றையும் அடைவதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வு வேண்டும். அவர்களின் எண்ணத்தில் மாற்றம் வரவேண்டும். பாரம்பரியமாக உள்ள பெண்கள் அடிமைத்தன எண்ணம் மாற்றப்பட வேண்டும். கல்வி, பொருளாதாரத்தில் சமநிலை ஏற்பட வேண்டும் என்பது மிக முக்கியமானது. இவை அனைத்தும் நிறைவேறினாலே பாலியல் சமநிலை உண்டாகும். பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தாலும், பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை. சட்டம்இயற்றக்கூடிய சட்டமன்றங்களில் பெண் உறுப்பினர்களை அதிகரித்தால் மட்டுமே, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சட்டங்களையும், வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வர முடியும். எல்லா துறைகளிலும் பெண்களுக்கு சுதந்திரம் அளித்து ஆதரவு கொடுத்தால் மட்டுமே சமுதாயத்தை உயர்த்திட முடியும் என்று பேசினார்.

 இந்த மாநாட்டில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், சுந்தரேஷ் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மனித உரிமை குழுவின் இயக்குனர் சந்த்ரா ப்ரிட்மென், சட்டப்பள்ளி துணை வேந்தர் கமலா சங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.