Friday, January 18, 2019

On Friday, January 18, 2019 by Tamilnewstv in ,    

பட்டமளிப்பு விழா ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரியில் இருபதாவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் மாலை மூன்று முப்பது மணி அளவில் நடைபெற்றது



சிறப்பு விருந்தினராக கரூர் வைசியா வங்கி நிர்வாக இயக்குனர் சேஷாத்திரி பங்கேற்கிறார்

மேலும் ஸ்ரீ ரங்கநாதர் பாதுகா வித்யாலயா தலைவர் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தேசிய தலைவர் ராஜகோபால் கல்லூரி செயலர் அம்மன்கி பாலாஜி இயக்குனர் ramanujam முதல்வர் ராதிகா துணை முதல்வர் பிச்சைமணி உட்பட துறைத்தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள் பட்டமளிப்பு விழாவில் 736 இளங்கலை மாணவர்களும் 162 முதுகலை மாணவர்களும் பட்டம் பெற்றனர்

Sunday, January 06, 2019

On Sunday, January 06, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பேட்டி

மாநிலம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள் அவர்களை அடிமைகளாக நடத்தி வருகிறார் பணியாளர்களுக்கு பணி வாய்ப்புகள் வரும் குறைபாடுகளும்  தலைவிரித்து ஆடுகின்றன 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை

ஊதிய விகிதம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கைகளை ஏற்கப்படவில்லை ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் பணியாளர்கள் சுமார் 30,000 பேர் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் இதுகுறித்து  22.1. 2019 அன்று திருச்சியில் கருத்தரங்கம் நடத்தி டாஸ்மாக்கில் நடப்பது என்ன என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் p.முருகானந்தம் மாவட்டத் தலைவர் t.ஜவஹர்லால் நேரு மாவட்ட செயலாளர் என் கண்ணன் மாவட்ட அமைப்பு செயலாளர் s.பெருமாள் மாவட்ட இணை செயலாளர் g.பழனிச்சாமி மாவட்ட துணைச் செயலாளர் ஆர் ஆர் செல்வம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் a.சுப்பிரமணி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் d.தமிழரசன் மற்றும்k. குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்


திருச்சி சோமரசம்பேட்டை அருகில் டாஸ்மாக் ஊழியர்கள் இடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது அதில் பாதிக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் இருவரும் தமிழரசன் குணசேகரன் பாதிக்கப்பட்டனர் இவர்கள் இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது பேட்டியின்போது உடனிருந்தனர்

பேட்டி பாலசுப்பிரமணியம் சிறப்புத் தலைவர் டாஸ்மாக் பணியாளர் சங்கம்

Saturday, December 29, 2018

On Saturday, December 29, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி

தமிழ்நாடு மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பாக திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் பேருந்து நிலையம் அருகே உள்ள ER மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது


நிகழ்ச்சியில் ராஜா ஜெகஜீவன் மாநில இணைச்செயலாளர் தலைமை வகித்தார் சந்திரசேகரன் மாவட்ட தலைவர் வரவேற்புரையாற்றினார் மாநில அமைப்பு செயலாளர் முனைவர் மு உதயகுமார் சிறப்புரையாற்றினார் மாநில பிரச்சார செயலாளர் பிரேம்குமார் சிறப்புரையாற்றினார் மாவட்ட பொருளாளர் ரவி நன்றி உரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் 50க்கும் பள்ளி மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்


இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மாநில அமைப்பு செயலாளர் உதயகுமார் கூறியபோது மாவட்ட கல்வி அலுவலர் பதவியில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற மாநில பொதுக்குழு தீர்மானத்தை இப்போது குழு மீண்டும் வலியுறுத்துகிறது என்று தலைமையாசிரியர் ஆசிரியைகளின் முழு வேலை நேரத்தை கற்றல்-கற்பித்தல் பணிகளுக்கு பயன்படுத்த ஏதுவாக நலத்திட்டங்களுக்கு ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளி க்கும் நல திட்ட அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்த இப்பொதுக்குழு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது மேலும் விலையில்லா மடிக்கணினி வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் இருப்பு வைத்து பொது பாதுகாப்பு ஏற்பாட்டினை செய்து குறுகிய கால அளவில் அனைத்து பள்ளிகளும் பெற்று வழங்க ஆவன செய்யுமாறு முதன்மை கல்வி அலுவலர கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்


பேட்டி ...
மாநில அமைப்பு செயலாளர்
முனைவர் உதயகுமார்

ராஜா ஜெகஜீவன் மாநில இணைச்செயலாளர்

Sunday, December 23, 2018

On Sunday, December 23, 2018 by Tamilnewstv   
திருச்சி     23.12.18

தந்தை பெரியாரின் நினைவுநாளையொட்டி  திருச்சியில் கருஞ்சட்டை பேரணியும், தமிழர் உரிமை மீட்பு மாநாடும் நடைபெறுகிறது

பெரியார் கொள்கைகளைப் பின்பற்றிவரும்
திராவிடர் கழகம், மே 17 இயக்கம் தேர்தல் அரசியலை முன்னெடுக்காத அமைப்புகள்
என உள்ளிட்ட
150-க்கும் மேற்பட்ட
பல்வேறு அமைப்புகள் பங்கேற்றுள்ளன.இம்மாநாடுக்கு முன்னதாக சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் `கருஞ்சட்டை’ அணிந்து திருச்சி தலைமை பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணியை திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணி துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது தென்னூர் ரோடு வழியாக மாநாடு நடைபெறும் உழவர் சந்தை மைதானம் வந்தடைந்தனர்.
இந்த மாநாட்டில் சுப.வீரபாண்டியன்,
மே.17 இயக்கம் திருமுருகன் காந்தி, கொளத்தூர் மணி உட்பட பலர் பங்கேற்கின்றனர்
On Sunday, December 23, 2018 by Tamilnewstv in ,    
பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் திருச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாஜக நிர்வாகிகளுடன் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்பாஜக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
On Sunday, December 23, 2018 by Tamilnewstv in ,    
திருச்சியில் ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசம்…

இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் உயர் அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் விவேக் அலாவத் தலைமையிலான  33 பேர் கொண்ட குழுவினர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை  ஜெய் பாரத் எனும் ராட்சத பலூனில் பறந்து செல்லும் சாகச நிகழ்ச்சி நடந்து வருகிறது.

ஆசியாவில் மிகப்பெரிய ராட்சத பலூனான 3 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி கொண்ட இந்த பலூனில் நாலு பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதால் மீதமுள்ள ராணுவ வீரர்கள் தரைவழியாக வாகனத்தில் பின் தொடர்ந்து செல்கின்றன.  பின்னர் அங்கிருந்து சுழற்சி முறையில் 4 ராணுவ வீரர்கள் பலூனில் ஏறி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சாகச பயணம் கடந்த 6-ம்தேதி காஷ்மீர் தொடங்கியது. இந்தியா முழுவதும் 31 முக்கிய  நகரங்கள் வழியாக கன்னியாகுமரிக்கு வருகிற 29-ஆம் தேதிக்குள் செல்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் டெல்லி போபால் திருப்பதி சென்னை காஞ்சிபுரம், விழுப்பும், பெரம்பலூர் வழியாக திருச்சி வந்தடைந்தார்கள்.

இந்த சாகசப் பயணத்தில் ஒரு பகுதியாக மேற்படி ராணுவ வீரர்களின் ராட்சத பலூனில் தாழ்வாக வந்து செல்லும் நிகழ்ச்சி திருச்சி உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதற்காக விளையாட்டரங்கம் பாதுகாப்புடன் தயாராக இருந்தது இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

On Sunday, December 23, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில்
பித்தப்பை நோய்கள், குடல் இறக்கம்(ஹெர்னியா), அப்பெண்டிக்ஸ், குடல் அடைப்பு, குடல் கட்டிகள், சினைப்பை கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகள், போன்ற நோய்களுக்கு
இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் தைராய்டு கட்டிகள், மார்பக கட்டிகள், பாத புண்கள், சர்க்கரை வியாதி, இரத்த குழாய் அடைப்பு, உமிழ்நீர் சுரப்பி கட்டிகள், இரைப்பை, குடல் கணையம், பித்தப்பை, அறுவை சிகிச்சைகள், மூலம் பவுத்திரம், தீக்காய சிகிச்சைகள், ரத்த நாள நோய்களுக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் பொது அறுவை சிகிச்சை மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.

இம்முகாமில் 200க்கும் மேற்கொண்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில் அறுவை சிகிச்சைக்காக 25 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரிகள் கதிரவன், உதயபாஸ்கர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்

Saturday, December 08, 2018

On Saturday, December 08, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை வரை தொழில் அலுவலர் சங்கம் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது

இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் புதிய நிர்வாகிகள் இன்று திருச்சியை சேர்ந்த ஞானமணி என்பவரும் பொருளாளராக ராமச்சந்திரன் என்பவரும் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து தலைவர் பதவி வகித்துவரும் ராஜேந்திரன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மேலும் செய்தியாளர்களிடம் முன்னாள் பொதுச் செயலாளர் முருகன் கூறும்பொழுது இன்றைக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது எஸ் டி ஓ ராஜேந்திரன் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்




இந்த கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன 46 jto இடைநிலை பதவி உயர்வு அளித்த முதன்மை இயக்குனர் அவர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் எங்கள் உடனே நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் 402 ஜே டி ஓ பதவிகள் நிரப்பப்பட வேண்டும் 19 ஆம் ஆண்டு முதுநிலை வரை தொழில் அலுவலர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கூறினார்
பேட்டி .... முருகன் முன்னாள் பொதுச் செயலாளர்

Sunday, December 02, 2018

On Sunday, December 02, 2018 by Tamilnewstv   
திருச்சி  02.12.18

நேற்று இரவு திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு 1.35 மணிக்கு 150 பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற ஸ்கூட் விமானம், விமான ஒடுதள பாதையில் சென்று கொண்டு இருக்கும் போதே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.

இவ்விமானத்தில் பயணித்த 150 பயணிகள் உயிர் தப்பினர், அவர்களை திருச்சி தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர்.

இது போன்ற நிகழ்வுகள் திருச்சியில் சமீபகாலமாக விமான கோளாறு, விமான விபத்து என அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.