Tuesday, April 16, 2019

On Tuesday, April 16, 2019 by Tamilnewstv   
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தல வரலாறு


கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு 17/04/2018. சித்திரை  திருத்தேர் விழா.  அம்மனுக்கு மிகமிக விசேஷமானது.
சக்தி வழிபாட்டிற்குரிய ஸ்தலங்கள் பலவற்றில் தமிழகத்திலே 'சாய்ஞ்சா கண்ணபுரம், சாதிச்சா சமயபுரம்' எனும் வாக்கிற்கிணங்க பிரத்யட்ச தெய்வமாக தன் கண்ணசைவினாலேயே லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்த்தவண்ணம் காவிரி நதி பாயும் சோழ நாட்டிலே திருச்சியிலிருந்து வடக்கே 6 கி.மீ. தொலைவிலுள்ள கண்ணபுரம் எனப்படும் சமயபுரத்திலே அமர்ந்த நிலையிலுள்ள எழிற்கோலத்திலே அழகுறக் காட்சி தருகிறாள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன்.

'சாதிச்சா சமயபுரம்' எனும் பெருவாக்கிற்கிணங்க, சமயபுரத்திலே தனக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஸ்ரீமாரியம்மனின் லீலா வினோதத்தைச் சற்றே காண்போமா!

விஜயநகர அரசுக்குத் தளர்ச்சி நேர்ந்தபோது விஜயநகர மன்னர்களால் வழிபாடு செய்யப்பெற்றுவந்த ஸ்ரீமாரியம்மன் உற்சவர் சிலையைத் தங்கப் பல்லக்கில் தூக்கிக்கொண்டு ஊர்வலமாக வந்தனராம். அவ்விதம் ஊர்வலமாக வந்தவர்கள் உணவு உட்கொள்ள வேண்டி சமயபுரத்தில் ஸ்ரீமாரியம்மனை இருத்தினர். உணவு உட்கொண்ட பின்னர் மாரியம்மனைத் தூக்க முயன்று முடியாமற்போகவே வருந்தினராம். தனக்குரிய இடம் இதுவே என்று அன்னையே சமயபுரத்தில் நிலைத்த பின்னர் விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் (கி.பி.1706-1732) அவரது காலத்தில்தான் அன்னைக்குத் தனிக்கோயில் அமைத்துப் பிரதிஷ்டை செய்தாரென்றும் சொல்லப்படுகிறது. 
இந்த விஜயரெங்க சொக்கநாத நாயக்கரிடம்தான் மௌனகுருவை குருவாகக் கொண்டு வாழ்ந்த தாயுமான சுவாமிகள் கணக்கராக இருந்தார். பின்னர் துறவு பூண்டார்.

விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில்தான் விறலிவிடு தூது, கூளப்ப நாயக்கன் காதலை இயற்றிய சுப்ரதீபக் கவிராயர் வாழ்ந்தார். சுப்ரதீபக் கவிராயரிடம்தான் வீரமா முனிவர் தமிழ் பயின்றார்.

தமிழ்ப் புலவர்களை ஆதரிக்காது தெலுங்கு மொழிக்கே ஆதரவு தந்து வந்த நாயக்க மன்னர்கள் வாழ்ந்த அந்த காலகட்டத்தில் தமிழ்மொழியை நிலைநாட்ட தாயுமான சுவாமிகள் போன்றோரை தோற்றுவித்தும், சமயத்தை நிலைநாட்ட இதுதான் சமயம் என்று(ம்) சமயபுரத்திலே அமர்ந்திட்ட மாரியம்மனின் லீலா விநோதத்தை என்னவென்று சொல்வது?

கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு ஆடிமாதம், தைமாதம், நவராத்திரி இவைகளெல்லாம் விசேஷமெனில் மாசி மாதம் வரும் பூச்சொரிதல் விழாவோ மிகமிக விசேஷமானது. இப்பூச்சொரிதல் விழாவின்போது லட்சக்கணக்கான மக்கள் திரளாக வந்திருந்து ஸ்ரீமாரியம்மனின் மேல் பூவைச் சொரிந்து அம்மனை வழிபடுவர்.

மாசி மாதம் கடைசி ஞாயிறன்று பூச்சொரிதல் உற்சவம் நடைபெறுகிறது. பூச்சொரிதல் நாள் முதல் பங்குனி மாதம் வரை ஒவ்வொரு ஞாயிறன்றும் பூச்சொரிதல் விழா நடைபெறும். பூச்சொரிதல் நாள் முதல் 4 வாரங்களுக்கு ஸ்ரீமாரியம்மனுக்குப் பச்சைப் பட்டினி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறதாம்.

பூச்சொரிதல் விழாவின் தாத்பர்யம்: ஊரெங்கும் 'மாரி' போடும் சமயங்களிலே உடம்பில் ஏற்படும் முத்துக்களைத் தானே ஏற்று அந்தப் பூ முத்துக்களை  பூப்போல ஸ்ரீமாரியம்மன் உதிர்த்து விடுதலால் உள்ளத்தில் எழும் அந்த நன்றியுணர்வை பக்தர்கள் அந்த மாரியம்மனுக்கு வௌதக்காட்டும் செயலின் வௌதப்பாடே பூச்சொரிதல் விழா.

பூச்சொரிதல் விழாவில் முதல் பூ திருவரங்கம் ஸ்ரீஅரங்கநாதரிடமிருந்து வந்து சொரியப்பட்ட பின்னரே எல்லா ஊர்களிலிருந்தும் வரும் பூக்கள் அம்மனுக்கு பூச்சொரியப்படுகிறது. பூச்சொரிதலுக்கு உதிரிப் பூக்களே பயன்படுத்தப்படுகிறது. சென்னை சிம்சனிலிருந்தும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு லாரியில் பூக்கள் பூச்சொரிதலுக்கு அனுப்பப்படுகிறதாம். பூச்சொரிதல் உற்சவம் காலைமுதல் இரவு வரை நடைபெறுமாம். 
பூச்சொரிதலில் சொரியப்படும் பூவானது ஸ்ரீமாரியம்மனின் சிரசிலிருந்து போடப்படும். இவ்விழாவில் ஸ்ரீமாரியம்மனின் திருமுகத்தை மட்டுமே காண்பிக்கும் அளவுக்கு அம்மன் பூக்குவியலில் மூழ்கித் திளைப்பாள்.

பூச்சொரிதல் விழாவில் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுடன் உடன்பிறந்த சகோதரிகள் அறுவரில் முதல் பூ சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கே. ஏனெனில் பெரியம்மை போடும் மூத்தவளுக்கு அதை எடுக்கத் தெரியாதாம். சமயபுரம் ஸ்ரீமாரியம்மனே அந்த முத்துக்களை உதிர்த்தலால் முதல் மரியாதை இந்த மாரியம்மனுக்கு என்று சொல்லப்படுகிறது. அடுத்து இரண்டாவது பூ அன்பிலூர் மாரியம்மனுக்கும், மூன்றாவது பூ நார்த்தாமலை மாரியம்மனுக்கும்
கடைசி பூ பெரியம்மை போடும் பெரியவளான பாலக்காடு மாரியம்மனுக்கு என்று சொல்லப்படுகிறது.

இப்பூச்சொரிதல் விழா ஆரம்பமான பின்னர்தான் ஊரெங்கிலுமுள்ள வேம்பு மரங்களிலே வேப்பம்பூவானது அரும்பு கட்ட ஆரம்பிக்குமாம்.


பூச்சொரிதல் விழாவின் முடிவில் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையில் தேரோட்டமும், அதற்கடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.  சித்திரை மாதக் கடைசியில் வசந்த விழாவும், வைகாசி மாதம் முதல் தேதியில் பஞ்சபிரகார உற்சவமும் நடைபெறுகிறது.




On Tuesday, April 16, 2019 by Tamilnewstv   
*திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்*


பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமான இக்கோயிலில் கடந்த மாதம்   பூச்சொரிதல் விழா தொடங்கிய நாளில் உலக நன்மைக்காக அம்மனும்,  அவரின் பக்தர்களும்  28 நாட்கள் கடைப்பிடித்த  பச்சைப் பட்டினி விரத நிறைவு, பூச்சொரிதல் விழா நிறைவு, சித்திரை தேர் திருவிழா தொடக்கம் ஆகியவை கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றன.


அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,   கொடி மரத்துக்கு அபிஷேகம் நடைபெற்று,  அம்பாள் முன்னிலையில் மேஷ லக்னத்தில் கொடியேற்றப்பட்டது.  திருவிழாவின் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்ற நிலையில்,   ஞாயிற்றுக்கிழமை இரவு குதிரை வாகனத்திலும்,   திங்கள்கிழமை இரவு வெள்ளி குதிரை வாகனத்திலும்  திருவீதி உலா நடைபெற்றது.  செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் தேர் வடம் பிடிக்கப்பட்டது நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது இவர்களுக்கு பாதுகாப்பாக காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
On Tuesday, April 16, 2019 by Tamilnewstv   
திருச்சி விமான நிலையத்தில்  99.8 கிராம்  தங்கச் சங்கிலி பறிமுதல்.

 சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது திருவாரூரை சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவர் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 3,15,767 மதிப்புள்ள 99.8  கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Monday, April 08, 2019

On Monday, April 08, 2019 by Tamilnewstv   
ராஜகோபுரத்தின் முன்னிருந்து ராஜ வம்சத்தினருக்கு வாக்கு கேட்கிறேன்



அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து டி ஆர் சரஸ்வதி ஸ்ரீரங்கத்தில் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டு பேசுகையில், திமுக அதிமுகவிற்கு இல்லாத  தில் டிடிவி தினகரனுக்கு உண்டு. கழகத் துணை பொதுச்செயலாளர் வீடு உறவினர்கள் வீட்டில் எல்லாம் வருமானவரித் துறையினர் சோதனையிட்டனர். பல்வேறு நெருக்கடிக்கு ஆளானார்.அப்பொழுது என்னை 20 வருடம் சிறையில் அடைத்தாலும் 21 வது வருடம் எதிர்த்து நிற்பேன் என்று கூறினார். பதவிக்காக கூனிக்குறுகி காலில் விழும் துரோகிகள் முட்டிப் போட்டு முதலமைச்சர் ஆனவர்கள் எல்லாம் இன்று பேசுகின்றார்கள். இத்தேர்தல் துரோகத்திற்கும் தர்மத்திற்கும் நடைபெறும் தேர்தலாகும். திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளார்கள். இவர்கள் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்கள். நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் இவர்கள். நாங்கள் பதவிக்கு அலையல பணத்துக்கு அலையல அதனால நாங்க அண்ணன் டிடிவி பக்கம் இருக்கின்றோம் ராஜகோபுரம் முன்பிருந்து ராஜவம்சத்தில் உள்ள சாருபாலா தொண்டைமானுக்காக பரிசு பெட்டகத்தில் வாக்கு சேகரித்து பேசுகின்றேன். ஆண்டவன் முன்பிருந்து பேசுகிறேன் .சிந்தித்துப் பாருங்கள் அம்மாவை சட்டசபையில் நாக்கு துருத்தி பேசியவர்கள் அம்மாவின் சமாதிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மானம் இருக்கா வெட்கம் இருக்கா தூன்னு துப்பல என்று கூறியவர்கள் கூட எல்லாம் கூட்டணி வைத்து விட்டு இப்பொழுது வாக்கு சேகரிக்க வருகின்றார்கள் .இது துரோகம் இல்லையா ஆண்டவனும் அம்மாவும் எங்க பக்கம் இருக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள் என்று ராஜகோபுரம் முன்பிருந்து ராஜ வம்ச சாருபாலா தொண்டைமானுக்கு சரஸ்வதி பரப்புரை மேற்கொண்டார் பகுதி செயலாளர் இளையராஜா மகளிரணி செயலாளர் சித்ரா விஜயகுமார் ஒன்றிய செயலாளர் வாசு உட்பட பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்
On Monday, April 08, 2019 by Tamilnewstv   
திருச்சி பாராளுமன்ற அமமுக வேட்பாளர் அம்மா சாருபாலா தொண்டைமான் திருச்சி மேற்க்கு தொகுதிக்குவுட்பட்டபகுதிகளில் சூராவளி பிரச்சாரம் மேற்க்கொண்டு வருகிறார்
திருச்சி பாராளுமன்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்

திருமதி சாருபாலா R தொண்டைமான் அவர்கள்

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி, ஜங்ஷன் பகுதிக்குட்பட்ட கருமண்டபம் , ராம்ஜி நகர்,பிராட்டியூர் ,கொத்தமங்கலம  பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,



திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு J. சீனிவாசன்,

திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் M.S. ராமலிங்கம்,

ஜங்ஷன் பகுதி கழக செயலாளர் R.R.தன்சிங்

மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Saturday, April 06, 2019

On Saturday, April 06, 2019 by Tamilnewstv   
பட்டி தொட்டி எல்லாம் பரிசுப் பெட்டகம் தான் ட்ரெண்டிங்





அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார் காந்தி சந்தையில் மகளிர் அணியினர் செண்டை மேளம் முழங்க பூரண கும்பம் வரவேற்பு அளித்தனர். கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சி நடத்தினார்கள் காந்தி சந்தையில் பிரச்சாரம் முடித்து உறையூரில்  திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசுகையில்,
சோழ மன்னர்களின் தலைநகராம் உறையூர். திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் இரண்டு முறை மேயராக இருந்தவர். நிதி ஆதாரத்தை 40 கோடியாக உயர்த்தியவர் , பாதாள சாக்கடை திட்டம், நடைபாதை, சாலையோர பூங்கா உள்ளிட்டவற்றை நடைமுறைப் படுத்தியவர். இவரை நாடாளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுத்தால் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், விமான நிலையம் விரிவாக்கம், நவல்பட்டு தொழில்நுட்ப பூங்கா, கொள்ளிடத்தில் தடுப்பணை உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த செயல் திட்டங்களை செயல்படுத்துவார். மோடி அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறதுஅவர்களுக்கு நமது துரோகிகள் துணை போகிறார்கள். வருகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் எட்டு சட்டமன்ற தொகுதியில் வெற்றி இல்லை என்றால் ஆட்சி கவிழ்ந்து விடும். தேசிய கட்சியை நம்பி எந்த பயனும் இல்லை. அம்மா காவிரி மேலாண்மையை கூட நீதிமன்றத்தில் போராடி உரிமையை பெற்றவர். நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டத்தில் பூமிக்கடியில் உள்ள இயற்கை செல்வங்களை எடுக்கின்றார். அனைத்து இயற்கைச் செல்வங்களையும் எடுத்தால் விளைநிலங்கள் எல்லாம் பொட்டல் காடாக மாறி சோமாலியா நாடாக முயற்சிக்கின்றார்கள். மோடி அரசு ஆண்டுக்கு இரண்டு கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறினார்கள் .ஆனால் ஒரு கோடி பேருக்கு கூட கொடுக்கவில்லை. மேலும் கருப்பு பணத்தை ஒழித்து 15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துவதாக கூறினார். ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களிலும் மக்களை வஞ்சித்து விட்டார் .இதனால் தொழில் புரிபவர்கள் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. 6 லட்சம் குடும்பத்தினர் நடுத்தெருவில் உள்ளார்கள். இன்று அனைத்து துறையிலும் பின்தங்கி உள்ளோம். அடிமை அரசின் கையாலாகாத் தனத்தால் நாம் பாதிக்கப்படுகிறோம். நமக்கு சின்னம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பொது சின்னம் வழங்க உத்தரவிட்டது. 36 சின்னங்களை கொடுத்தார்கள். அதில் ஸ்க்ரூ ட்ரைவர், டூத் பேஸ்ட் ,செருப்பு என்று பல்வேறு சின்னங்கள் இருந்தன. ஆனால் தெரியாமல் பரிசுப்பெட்டகம் சின்னமும் அதில் இருந்தது. உடனே அம்மா தாய் சேய் திட்டத்திற்கு வழங்கிய பரிசு திட்டம் நினைவுக்கு வந்தது. உடனே பரிசு பெட்டக சின்னத்தை பெற்றோம். இன்று பட்டி ,தொட்டி எல்லாம் பரிசு பெட்டகம் தான் ட்ரெண்டிங். நமக்கு யாரும் அங்கீகாரம் வழங்க தேவையில்லை மக்கள் தான் அங்கீகாரம் தர வேண்டும் .இங்கே தினம் ஒரு கட்சியில் இருந்து தற்போது காங்கிரஸில் போட்டியிடுகிறார் . வாக்கு சேகரிப்பு கூட்டத்திலும் தூங்கி விடுகின்றார். இவர் திகழ்கிறார் வில் சேர்ந்து விடலாம். வாக்காளப் பெருமக்கள் திருச்சியின் வெற்றி வேட்பாளர் சாருபாலா தொண்டைமானுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்யுமாறு கூறினார். மாநகர செயலாளர் சீனிவாசன் இணைச்செயலர் சேட், லதா, sdpi மாநகர செயலாளர் ஹஸன், அமமுக திருச்சி அவைத் தலைவர் ராமலிங்கம் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ,ராஜா, உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் ஜங்சன் பகுதி செயலாளர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ் ஒரு மலைப்பகுதி செயலர் சங்கர் தில்லை நகர் பகுதி செயலாளர் இப்ராஹிம் பிச்சை வழக்கறிஞர் மணிவண்ணன் மகளிரணி செயலர் சித்ரா விஜயகுமார் உட்பட மாநில மாநகர பகுதி வட்டக் கழக சார்பில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றார்கள்.

Sunday, March 31, 2019

On Sunday, March 31, 2019 by Tamilnewstv   
இஸ்லாமியர்களின் பாதுகாவலராய் உள்ள அமமுக விற்கு பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்  செய்யுங்கள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து உறையூர் முஸ்லிம் தெருவில்
sdpi கட்சி செயலர் ஹசன் பேசுகையில், இஸ்லாமியர்களுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக பாசிச ஆட்சி கொண்டு வந்த முத்தலாக் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளுக்கு மத்திய அரசுகள் இன்றும் அமல்படுத்தவில்லை அதனால் சிறப்புக்குழு அமைத்து சட்ட அங்கீகாரம் அளித்து இஸ்லாமியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள  முஸ்லிம் சிறைவாசிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் வக்பு சொத்துகள் மீட்கப்படும் ஏழை இஸ்லாமியர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தப்படும் இமாம்கள் துணை இமாம்கள் மாத வருமானம் ரூபாய் 40,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்லாமியர்களின் நலன் மற்றும் முன்னேற்றம் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்கள். மாறி மாறி ஆண்டவர்கள் இஸ்லாமிய நலன் காக்கும் வகையில் செயல்படவில்லை இஸ்லாமியரின் பாதுகாவலராக இருக்கக் கூடிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பெருவாரியான வாக்குகளை பரிசு பெட்டியில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்றார்.
 அமைப்பு செயலாளர் மனோகரன் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அவைத் தலைவர் ராமலிங்கம் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஸ்ரீரங்கம் பகுதி செயலர் இளையராஜா உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர் ஒன்றிய செயலாளர் வாசு எம்ஜிஆர் மன்ற தலைவர் நடேசன் வர்த்தக அணி செயலாளர் நாகராஜன் மகளிரணி செயலர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட மாநகர் பகுதி ஒன்றிய பேரூராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள்.

Friday, March 29, 2019

On Friday, March 29, 2019 by Tamilnewstv   
ஸ்ரீரங்கத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பிரச்சாரம்



பூலோக வைகுண்டம் என்று போற்றக்கூடிய 108 திவ்ய தேசங்களில் முதன்மையான அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில்
ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா கோபுரத்தின் முன்பிருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் பிரச்சாரத்தை துவங்கி பேசுகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பக்த கோடிகளுக்கு அன்னதானம் யாத்ரிநிவாஸ் சட்டக்கல்லூரி வண்ணத்து பூச்சி பூங்கா மாணவர்களுக்கு கல்லூரி என இத்தொகுதிக்கு அவர் நல்ல பல திட்டங்களை வழங்கி உள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் எனக்கு பரிசுப் பெட்டி சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தெற்கு உத்திர வீதி மேற்கு உத்தர வீதி வடக்கு உத்திர வீதி கிழக்கு உத்திர வீதி தெற்கு சித்திரை வீதி மேற்கு சித்திர வீதி வடக்குச் சித்திரை வீதியில் கிழக்குச் சித்திரை வீதி அடையவளஞ்சான் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்கள்
 அமைப்பு செயலாளர் மனோகரன் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அவைத் தலைவர் ராமலிங்கம் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஸ்ரீரங்கம் பகுதி செயலர் இளையராஜா உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர் ஒன்றிய செயலாளர் வாசு எம்ஜிஆர் மன்ற தலைவர் நடேசன் வர்த்தக அணி செயலாளர் நாகராஜன் மகளிரணி செயலர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட மாநகர் பகுதி ஒன்றிய பேரூராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள்.
On Friday, March 29, 2019 by Tamilnewstv   
அம்மா மக்கள்
முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி

பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின்  39 வேட்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தலிலும் , 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது. பொது சின்னமாக டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தை கேட்டார். இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து தினகரன்  உச்சநீதிமன்றத்தை நாடினார். அங்கு அமமுக தரப்புக்கு  நீதிபதிகள் பொது சின்னம் ஒன்றை ஒதுக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில், அமமுக வேட்பாளர்கள் அனைவருக்கும் பொதுச்சின்னமாக பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.