Friday, May 22, 2020
On Friday, May 22, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சியிலிருந்து 773வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவரவர் ஊர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்டனர்
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி தொடர்பாக தடை உத்தரவு அமலில்
உள்ளதால் தமிழக முதலமைச்சர் அவர்கள் வெளிமாநில
தொழிலாளர்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் அந்தந்த மாநிலங்களுக்கு
பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என ஆணையிட்டுள்ளார்.
அதன்படி 15
மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த புலம் பெயர்ந்த இராஜஸ்தான் மாநிலத்தை
சேர்ந்த தொழிலாளர்கள் 773 நபர்கள் திருச்சிராப்பள்ளி இரயில்வே ஜங்சன் ரயில்
நிலையத்திலிருந்து சமூக இடைவெளி கடைபிடித்து இரவு உணவு வழங்கி
சிறப்பு இரயில் மூலம் பயணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
சிவராசு இன்று (22.05.2020) அனுப்பி வைத்தார்
On Friday, May 22, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில் மே-23 தேதி
அவரது திருவுருவச்சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
செய்யப்படுகிறது.
மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1345-வது பிறந்த நாள்
விழா அவரது திருவுருவச்சிலைக்கு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செய்யப்படவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர்
சிவராசு அறிவிப்பு
மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1345-வது பிறந்த நாள் விழா
தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது
கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக 144 – தடை உத்தரவு அமலில்
உள்ளதால் பொது மக்களின் நலன் கருதியும் கொரோனா வைரஸ் நோய் தொற்று
பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எனவே வருகின்ற (23.5.2020) அன்று மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
அவர்களது 1345 - வது பிறந்த நாள் விழா அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு
அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மட்டும் மாலை அணிவித்து மரியாதை
செலுத்துவார்கள். 144 – தடை உத்தரவு காரணமாக இந்நிகழ்ச்சிகளில் பொது மக்கள்
கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் திருவுருவச்சிலைக்கு
செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறதுஇவ்வாறு மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
On Friday, May 22, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மன்னார்புரத்தில் அமைந்துள்ள எல்பின் நிறுவனம் பற்றியும் நிறுவனத் தலைவர் அழகர்சாமி என்னும் ராஜா மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆர். கே என்னும் ரமேஷ் குமார் பற்றியும் அறம் மக்கள் நல சங்கம் பொது சேவை என்ற பெயரில் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது குறித்தும் பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக பொதுமக்கள் என் மாறுவதை தடுக்கும் விதமாக விரிவான செய்திகள் வெளியிட்டு இருந்தோம்.
இன்று நாம் எந்த செய்தியும் வெளியிடவில்லை. அவர்களது எல்பின் நிறுவனத்தில் உள்ள முக்கிய லீடர் ஒருவர் நிறுவனத் தலைவர் ராஜாவுக்கு அனுப்பிய ஆடியோ பதிவை கேட்ட பின்பாவது பொதுமக்கள் விழிப்படைய வேண்டும் என்பதே நமது நோக்கம். இந்த ஆடியோ வெளியிட்ட சங்கரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இந்நிறுவனத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
Thursday, May 21, 2020
On Thursday, May 21, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி வருவாய் ஆய்வாளருக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் பிர்காவில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சேகர் என்பவர் 20.5.2020 அன்று வாகன விபத்தில் படுகாயமடைந்தார்.
திருச்சி அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 21.5.2020 அதிகாலை இறந்துவிட்டர் .
பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய பிறகு ஈமச்சடங்கு நிதியாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
On Thursday, May 21, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி
திருச்சியில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம் சமுதாய மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரண பொருட்களை அமைச்சர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
கொரோனா வைரஸ் தாக்குதல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக பலர் வருவாய் இழந்து உணவன்றி ஏழை - எளியவர்கள், ஆதரவற்றோர் தவித்து வருகின்றனர்.
அவர்களுக்கு தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் மற்றும் பலர் அரிசி, காய்கறி ஆகியவற்றை உதவி செய்து வருகின்றனர்.
இந்த வகையில் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு ஆரம்பித்ததிலிருந்து மக்கள் சேவையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரணப் பொருட்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக இன்று சையது முத்தரசா பள்ளியில் நிவாரண பொருட்களை முஸ்லிம் சமுதாய மக்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இன்று அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர்கள் ஜவஹர்லால் நேரு, வெல்லமண்டி சண்முகம், பகுதி செயலாளர் அன்பழகன், சந்து கடை சந்துரு, பலர் கலந்து கொண்டனர்.
Wednesday, May 20, 2020
மணப்பாறை அருகே
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை.
உயரதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள தெலுங்கபட்டியைச் சேர்ந்தவர் பிச்சாண்டவர். விவசாயி. இவருக்கும் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்த தாமரைச் செல்விக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன் திருமணம் நடைபெற்றது.
பின்னர் நிறைமாத கர்ப்பிணியான தாமரைச் செல்விக்கு கடந்த மார்ச் மாதம் 9 ம் தேதி நள்ளிரவு மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் 10 ம் தேதி காலை பிறந்த குழந்தையின் தொடையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் உடல்நிலையும் சரியில்லாமல் இருந்ததால் மருத்துவமனையிலேயே 15 நாட்களாக தங்கி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
ஆனாலும் குழந்தைக்கு அவ்வபோது காய்ச்சல் ஏற்பட்டுக் கொண்டே இருந்துள்ளது. இதுதொடர்பாக மரவனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு முறை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போதும் கொரோனா காலகட்டமாக இருப்பதால் சிகிச்சை அளிக்க மறுத்து மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி 45 நாட்களுக்கு பின்னர் அந்த குழந்தைக்கே இரண்டாம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தை இன்று காலை முதல் காய்ச்சல் ஏற்பட்டு தொடர்ந்து கதறி அழவே வீட்டில் இருந்தவர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி தொடையில் முதலில் தடுப்பூசி போட்ட இடத்தை பார்த்த போது அதில் லேசாக ஊசி ஒன்று தெரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து லேசாக அமுக்கி பார்த்த போது பாதி ஒடிந்த நிலையில் இருந்த ஊசி முழுவதுமாக வெளியே வந்தது.
இதனால் மிகுந்த மனவேதனைக்கு ஆளான தாமரைச் செல்வி குடும்பத்தினர் மீண்டும் குழந்தையை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ அதிகாரியிடம் நடந்த சம்பவத்தை கூறி தொடையில் உடைந்த நிலையில் இருந்து எடுக்கப்பட்ட ஊசியை காண்பித்தனர்.
மேலும் முதலில் தடுப்பூசி போட்டு ஊசி உடைந்து தொடையிலேயே விட்டுச் சென்ற செவிலியர் மீது நடவடிக்கை எடுத்திடக் கோரி மருத்துவ அதிகாரியிடம் புகாரும் அளித்தனர்.
பிறந்த பச்சிளம் குழந்தைக்கு இரண்டாவது நாளே போடப்பட்ட ஊசி உடைந்த நிலையில் சுமார் 70 நாட்கள் தொடையிலேயே இருந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட செவிலியரை உடனடியாக பணி நீக்கம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையும் மேலோங்கி உள்ளது.
பேட்டி :
1. தாமரைச்செல்வி, குழந்தையின் தாய்.
2. அமிர்தம், குழந்தையின் அம்மாச்சி.

மணப்பாறையில் திமுக வின் சார்பில் மாற்றுத்திறனாளிக்கு நிவாரண உதவிகள்
கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி வாழ்வாதாரம் இழந்துள்ள தொழிலாளர்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு கமூக நல அமைப்பினர்கள் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். இதேபோல் திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றிய திமுக வின் சார்பில் சீகம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அன்பில்.மகேஸ்பொய்யாமொழி அரிசி, காய்கறிகள் தொகுப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இதில் துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை பெற்றுச் சென்றனர்.

On Wednesday, May 20, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை
கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள சூழ்நிலையில் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து வருகின்றனர். இந்நிலையில் டிஎன் ஆல் டிரைவர்ஸ் அசோசியேசன் சார்பில் திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளைச் சேர்ந்த ஓட்டுனர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களுக்கான அமல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஓடடுனர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிதியுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி வட்டாட்சியர் அலுவலகத்தி;ற்கு சென்று துணை வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்னாக போக்குவரத்;தில் பணியாற்றும் தங்களுடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அரசு உதவவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வந்த பிகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1425 பேரை சிறப்பு ரயில் மூலம் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் பணிபுரிந்த 1009 தொழிலாளர்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் பணியாற்றிய 416 தொழிலாளர்கள் என 1425 தொழிலாளர்கள் திருச்சிராப்பள்ளி ரயில்வே ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து பீகார் மாநிலத்தின் மோதிகாரி ரயில்வே நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...