Wednesday, May 27, 2020

On Wednesday, May 27, 2020 by Tamilnewstv in    
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
திருச்சிராப்பள்ளி ரயில்வே ஜங்சனில் இருந்து பீகார் மாநிலத்தை சர்ந்த 839 நபர்கள் 

சிறப்பு ரயில் மூலம் பீகார் மாநிலத்திற்கு இன்று (27.5.2020) அனுப்பி வைக்கப்பட்டனர். 
மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல் 

தமிழக அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநிலத்தில் உள்ள 
சொந்த ஊர்களுக்கு சிறப்பு இரயில் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும் என்று 
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள் 

 அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 248 அரியலூர் மாவட்டத்தில் 133
புதுக்கோட்டை மாவட்டத்தில் 157
பெரம்பலூர் மாவட்டத்தில் 148 திண்டுக்கல் 139 கரூர் 
14 ஆகிய 6 மாவட்டங்களில் பணிபுரிந்த வந்த வெளிமாநில தொழிலாளர்கள் 339
நபர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகத்தின் சிறப்பு பேருந்துகள் மூலம் சமூக 
இடைவெளியை கடைபிடித்து திருச்சிராப்பள்ளி இரயில்வே ஜங்சனுக்கு அழைத்து
வரப்பட்டு மதிய உணவு வாட்டர் பாட்டில் பிஸ்கட் போன்ற உணவு பொருட்கள் 
ஒவ்வொருக்கும் வழங்கப்பட்டு இன்று (27.05.2020) பீகார் மாநிலத்திற்கு சிறப்பு இரயில் 
மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் மாவட்ட 
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வடிவேல்பிரபு மற்றும் பலர் கலந்து 
கொண்டனர்.

Tuesday, May 26, 2020

On Tuesday, May 26, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 26

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு தலைமையில் வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து மனு அளித்தனர். 


கோவிந்தராஜூலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்டம் சார்பில் திருச்சி ஆட்சியரை  சந்தித்தோம். கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக ஆட்சியரை சந்தித்து வலியுறுத்தி எங்களது குறைகளையும், அரசு செய்ய வேண்டிய கடமைகளையும் எடுத்துக் கூறினோம். மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான ஊழியர்கள் சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. மே மாதத்திற்கான சம்பளம் தற்போது நிலுவையில் உள்ளது. 



ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் தொழில் வரி, மின்சார கட்டணம் ஆகியவை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து ஆட்சியரிடம் தெரிவித்தோம். இன்னும் ஓரிரு நாட்களில் இது தொடர்பான முடிவை அரசு எடுத்து அறிவிக்கும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 வரும் வெள்ளிக்கிழமைக்குள் இதற்கான தீர்வு கிடைக்கும். சனிக்கிழமை முதல் தொழில் நிறுவனங்களை திறந்து தொழில் புரியலாம் என்று தெரிவித்துள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் வெள்ளிக் கிழமைக்குள் அரசு நல்ல முடிவு எடுக்கவில்லை என்றால் இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சென்னையில் அனைத்து தரப்பு வியாபாரிகளும் ஆலோசனை மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றார்.
On Tuesday, May 26, 2020 by Tamilnewstv in    
திருச்சிகர்நாடக மாநிலத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அந்த 72 பயணிகளுக்கு தொற்று பரிசோதனை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து இண்டிகோ சிறப்பு விமானம்  மூலம் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த 72 பயணிகளை கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணி முன்னெச்சரிக்கையாக சுகாதாரத் துறையின் மூலம் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அறிகுறி உள்ளதா என திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு  அவர்கள் இன்று 26.5. 2020 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி மற்றும் பலர் உடன் இருந்தனர்
On Tuesday, May 26, 2020 by Tamilnewstv in    
திருச்சி 
காணொலிக் காட்சி மூலம் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறியும் பணியில் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார்.


கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், திருநங்கைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்புக்காக திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

குறிப்பாக வாட்ஸ்அப், இணையதளம் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் வழிகளில் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 


அந்த வகையில், ஊரடங்கு காரணமாக திருச்சி சரக காவல் எல்லைக்கு உட்பட்ட திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய ஐந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்களிடமிருந்து மனுக்கள் வரப் பெற்றது.ஊரடங்கு காரணமாக பொதுமக்களால் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து தங்களது குறைகளைத் தெரிவிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.  


ஐந்து மாவட்ட மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி முதல் 1 மணி வரை ‘கூகுள் மீட்’ செயலி மூலம் காணொலிக் காட்சி வாயிலாக பொதுமக்களிடம் குறைகளைக் கேட்க டிஐஜி பாலகிருஷ்ணன் முடிவு செய்தார்.இந்தக் காணொளி காட்சியில் பங்கேற்க 0431 2333909 என்ற தொலைபேசி எண்ணில் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களைத் பதிவு செய்து கொள்ள வேண்டும். 


அவ்வாறு பதிவு செய்த நபர்களைக் குறிப்பிட்ட நேரத்தில் காணொலிக் காட்சி மூலம் டிஐஜி தொடர்புகொண்டு குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.

Monday, May 25, 2020

On Monday, May 25, 2020 by Tamilnewstv in    
திருச்சி மத்திய சிறையில் பணியிட மாறுதலை கொண்டாடிய சில சிறை பாதுகாவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


திருச்சி மத்திய சிறையில் பணியாற்றும் சிறைக் காவலர், சிறை பாதுகாவலர்களுக்கு சிறைச்சாலை வளாகத்திலேயே குடியிருப்பு உள்ளது. 


இந்தக் குடியிருப்பில் சிறை பாதுகாவலர்கள், கண்காணிப்பாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறையில் பணியாற்றும் சிறை பாதுகாவலர்கள் சிலருக்குபணியிட மாறுதல் கிடைத்துள்ளது.

 அந்த நபர்கள் பேரும் இருசக்கர வாகனத்தில் சிறை குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


அதனை சிறை குடியிருப்புவாசிகள் செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அந்தக் கணொலியின் அடிப்படையில் கே.கே.நகர் காவல்நிலைய ஆய்வாளர், சிறை பாதுகாவலர்கள் 20 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
On Monday, May 25, 2020 by Tamilnewstv in    
*திருச்சிக்கு சிறப்பு விமானம் மூலம் வந்த பயணிகளுக்கு தொற்று பரிசோதனை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு* 



கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து இண்டிகோ சிறப்பு விமானம்  மூலம் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த 58 பயணிகளை கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணி முன்னெச்சரிக்கையாக சுகாதாரத் துறையின் மூலம் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அறிகுறி உள்ளதா என திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு  இன்று 25.5. 2020 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி மற்றும் பல அதிகாரிகள் உடனிருந்தனர்.
On Monday, May 25, 2020 by Tamilnewstv in    
திருச்சி மன்னார்புரத்தில்  அமைந்துள்ள எல்பின் நிறுவனம் பற்றியும் நிறுவனத் தலைவர் அழகர்சாமி என்னும் ராஜா மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆர். கே என்னும் ரமேஷ் குமார் பற்றியும் அறம் மக்கள் நல சங்கம் பொது சேவை என்ற பெயரில் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது குறித்தும் பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக பொதுமக்கள் ஏமாறுவதை தடுக்கும் விதமாக விரிவான செய்திகள் வெளியிட்டு இருந்தோம்.  

                




மேலும் இந்நிறுவனத்தின் பல கோடிகள் முதலீடு செய்து அதனை திருப்பி கேட்ட பொழுது இவர்கள் பணம் தர மறுத்ததால் திருப்பூரில் சிவகுமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்


On Monday, May 25, 2020 by Tamilnewstv in    
திருச்சி ரமலான் சிறப்பு தொழுகை பல்வேறு இடங்களில் பல்வேறு முஸ்லிம்அமைப்புகள் சார்பாக நடைபெறும்

ஆனால் இன்று தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் முஸ்லிம் சமுதாய மக்கள் தொழுகைகளை தங்களது இல்லத்திலேயே சிறப்பாக நடத்தி வருகின்றனர்
அப்படி சிறப்பாக நடத்திவரும் தொழுகைகளில் ஒன்றாக திருச்சியில் முஸ்லிம் சமுதாய மக்கள் அவர்களுடைய வீட்டில் சிறப்பு தொழுகை அவர்களது குடும்பத்துடன் ஈடுபட்டனர் மேலும் மக்களை தொற்றிலிருந்து காக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் வேண்டியதாக தெரிவித்தனர்

Saturday, May 23, 2020

On Saturday, May 23, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

மக்கள் சேவையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

சமூக இடை வெளியில் நலத்திட்ட உதவிகள் - ஊரடங்கு உத்தரவு ஆரம்பித்ததிலிருந்து தனது தொகுதி மக்கள் கஷ்டப்படாமல் இருக்க திருச்சியில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான  அமைச்சர்வெல்லமண்டி நடராஜன் மனிதநேயத்துடன் தனது தொகுதிவார்டு வாரியாக இலவசமாக சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கி வருகிறார்



தமிழகத்தில் கொரோனா பாதிப்பை அடுத்து தமிழகத்தில்  அமைச்சர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் நலத்திட்டங்களை வழங்கி  வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக  திருச்சி கிழக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரும் பொது மக்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கடந்த 50 நாட்களுக்கு மேலாக  வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் பொதுமக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையில் தொடர்ந்து   தொகுதிக்கு உட்பட்ட வார்டு வாரியாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். 


தற்போது முஸ்லிம் சமுதாய மக்களுக்கு ரம்ஜான் பண்டிகை வருகிறது அதற்காக ஏழை எளிய முஸ்லிம் சமுதாய மக்களுக்கு இலவச பொருட்கள்


திருச்சி மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் இருந்த இடத்தில் மக்களை வரிசையாக சமூக இடைவெளி விட்டு நாற்காலியில் அமரச்செய்து ஒருவர் பின் ஒருவராக சமூக இடைவெளி பின்பற்றி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது


 நிவாரண தொகுப்பு பைகளில் அரிசி, காய்கறி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


 இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஜவஹர்லால் நேரு, மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன்,வெல்லமண்டி சண்முகம், மகளிர் அணியைச் சேர்ந்த ஜாக்லின், மற்றும் சந்திரு, கணேஷ் உட்பட  சார்ந்த அதிமுகவை சேர்ந்த  கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பகுதி தொகுதி செயலாளர்கள் வட்டச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்த கொண்டனர்.