Monday, June 08, 2020
On Monday, June 08, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி வியாபாரம் தொடங்க அனுமதி கோரி திருச்சி காந்தி மார்க்கெட் நிலையான கடை வியாபாரிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிலையான கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த கடைகளில் வெல்லம், பானை, கூடை, மிட்டாய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இந்த கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதனால் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து விதமான கடைகளும் மூடப்பட்டது. காந்தி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகளுக்கு மாற்றாக வெவ்வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த நிலையான கடைகளுக்கு எவ்வித மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் நிலையான கடை வியாபாரிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், நிர்வாகி பாலசுப்பிரமணியன் தலைமையில் சங்கத்தினர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திருச்சி ஆட்சியர் சிவராசுவை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
பேட்டி; பாலகிருஷ்ண
On Monday, June 08, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஜான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி முத்தம்மாள். இவர்களின் மகன் மணி. மருமகள் சுமதி ராணி உள்ளிட்ட குடும்பத்தினர் ஏலச்சீட்டு மற்றும் பிடி சீட்டு, குலுக்கல் சீட்டு ஆகியவற்றை நடத்தி வந்துள்ளனர்.
இவர்களிடம் திருச்சி கருவாட்டு பேட்டை, ஜான் தோப்பு, நாயுடு மஹால், கமலா நேரு நகர், என்எஸ்பி ரோடு, சத்யமூர்த்தி நகர், வடக்கு தாராநல்லூர், சின்ன செட்டி தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் சீட்டு சேர்ந்துள்ளனர்.
மேலும் பணத்துக்கு அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர். இந்த வகையில் 34 பேரிடம் தலா ஒரு லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பெற்றுள்ளனர். அதேபோல் ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கும் பணம் கொடுக்காமலும், வட்டிக்கு ஆசைப்பட்டு கொடுத்தவர்களுக்கும் பணத்தை திருப்பி கொடுக்காமல் பழனிச்சாமி குடும்பத்தினர் மோசடி செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வகையில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மோசடி நடந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கேட்டால் தரக்குறைவாக பேசுவதோடு, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இந்து மகா சபா மாநில துணைத் தலைவர் பரமானந்தன் தலைமையில் இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆணையர் வரதராஜுவை சந்தித்து மனு கொடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உத்தரவாதம் அளித்தார். இதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
பேட்டி: இந்து மகா சபா மாநிலத் துணைத் தலைவர் பரமானந்தன்.
Saturday, June 06, 2020
On Saturday, June 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி சரகத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் எலி மருந்து சாப்பிட்டு 2018-ல் 138 பேரும், 2019-ல் 165 பேரும், 2020 மே மாதம் வரை 63 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
எனவே, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்பவர்களைத் தடுக்கும் வகையில் திருச்சி சரகத்தில் சட்ட விரோதமாக எலி மருந்து விற்பனை செய்யும் 228 கடைகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் 160 கடைகளும், புதுக்கோட்டையில் 68 கடைகளும் அடங்கும்.
இதற்கிடையே எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்பவர்களைத் தடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள காவலர் நல ஆய்வாளர்கள், தற்கொலை தடுப்பு சிறப்புப் பிரிவு ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எலி மருந்து விற்பனை செய்யும் கடைக்காரர்களை ஒன்றிணைத்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்கியுள்ளனர்.
திருச்சிக்கு அஜீம் -94981 10803, புதுக்கோட்டைக்கு லட்சுமி - 94981 06582, கரூர் கார்த்திகா - 94981 61860, பெரம்பலூர் கார்த்திகாயினி - 94875 56866, அரியலூர் சுமதி - 94981 10774 ஆகியோர் இந்த சிறப்புப் பிரிவின் ஆய்வாளர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர்
கடைகளில் யாரேனும் எலி மருந்து வாங்கினால், கடைக்காரர்கள் உடனடியாக தற்கொலை தடுப்பு சிறப்புப் பிரிவு ஆய்வாளர்களுக்கோ அல்லது அவரால் நடத்தப்படும் குழு வுக்கோ தகவல் கொடுக்க வேண்டும். அவ்வாறு தகவல் கொடுக்க முடியாதபட்சத்தில் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகங்களை திருச்சிக்கு 0431-2333629, புதுக்கோட்டைக்கு 04322-255299, பெரம்பலூருக்கு 04328-224962, அரியலூருக்கு 04329-222106 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.
அதைத் தொடர்ந்து தற்கொலை தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸார், எலி மருந்து வாங்கிச் சென்றவர்களைத் தொடர்புகொண்டு, காரணத்தை அறிந்து, யாருக்கேனும் தற்கொலை எண்ணம் இருந்தால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, அதிலிருந்து விடுபட உதவி செய்வர்"
என தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட மனித நேய செயலில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி
On Saturday, June 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம்
மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றதை மாவட்ட
ஆட்சித்தலைவர் சிவராசு இன்று (06.06.2020) பார்வையிட்டு
ஆய்வு செய்தார்.
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு இன்று (06.06.2020) குவைத் நாட்டில்
இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் 103 பயணிகள் திருச்சிராப்பள்ளி
விமான நிலையத்திற்கு வருகைபுரிந்தனர்.
இதில் அரியலூர் 2 சென்னை 2 கோயம்புத்தூர் 1 கடலூர் 5 கள்ளக்குறிச்சி 2
கன்னியாகுமரி 3 கரூர் 1மதுரை 2 நாகப்பட்டிணம் 3 பெரம்பலூர் 5 புதுச்சேரி 2
புதுக்கோட்டை 6 இராமநாதபுரம் 13 சேலம் 2 சிவகங்கை 4 தஞ்சாவூர் 13
திருவண்ணாமலை 3 தூத்துக்குடி 1 திருவாரூர் 9திருச்சிராப்பள்ளி 10 திருநெல்வேலி
4 திருப்பட்டூர் 1 வேலூர் 2விழுப்புரம் 7 என 24 மாவட்டங்களை சார்ந்த ஆக
மொத்தம் 103 பயணிகள் வருகைபுரிந்தனர். கொரோனா வைரஸ் நோய்தடுப்பு
முன்னெச்சரிக்கையாக மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதலின்படி
சுகாதாரத்துறையினர் மூலம் விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை
செய்யப்பட்டது. இதில் எவருக்கும் கொரோனா வைரஸ் நோய்தொற்று இல்லை என
உறுதி செய்யப்பட்டது. அந்தந்த மாவட்டங்களுக்கு அரசு சிறப்பு பேருந்துகள் மூலம்
பயணிகளை அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாச்சியர்
விஸ்வநாதன் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் சுப்ரமணி பயிற்சி
ஆட்சியர் செல்வி சரண்யா திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டாட்சியர் மோகன்
மற்றும்பலர் உடனிருந்தனர்.
On Saturday, June 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*ஜி - கார்னரில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.*
*தியாகி வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன் கோரிக்கை*
உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரசின் கோரத் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருச்சியின் மையப் பகுதியில் இயங்கி வந்த காந்தி மார்க்கெட்டை மக்களின் நலன் கருதி தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் 1.4.2020 முதல் பூட்டி சீல் வைத்தது.
மக்களை காப்பாற்றுவதற்காக அரசு எடுத்த நடவடிக்கையை ஏற்றுக்கொண்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்த அனைத்து காய்கறி வியாபாரிகளும் பொன்மலை ஜி - கார்னரில் வியாபார செய்து வருகின்றனர். இடையில் மழை பெய்த போதும் பொது படுத்தாது தங்கள் வியாபாரம் மூலம் பொதுமக்களுக்கும், நுகர்வோருக்கும் தரமான காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனிடையே ஒரு சில அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் தங்களை முன்னிலைப்படுத்த பலமுறை முயன்றும் முடியாமல் போனதால் தற்போதுள்ள சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு வியாபாரிகளின் ஒரு பிரிவினரை அரசுக்கு எதிராகவும், பொது மக்களுக்கு தரமான காய்கறிகள் கிடைப்பதை தடை செய்யும் விதமாகவும், எச்சரிக்கை விடுக்கின்ற வகையில் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ள தலைவர் மார்க்கெட்டை பூட்டும் போது வராமல் இருந்து விட்டு இப்போது வந்து *7.6.2020-ல் காந்தி மார்க்கெட் திறக்கவில்லை என்றால் 8.6.2020 முதல் காலவரையின்றி காய்கறி வியாபாரம் செய்ய மாட்டோம்* என்று அறிவித்துள்ளனர்.
அந்த தலைவரின் இந்த அறிவிப்பானது மொத்தம், கமிஷன் மண்டி வியாபாரிகளை விட சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதோடு நுகர்வோரும், பொது மக்களும் காய்கறி கிடைக்காமல் சிரமப்படுகின்ற சூழல் ஏற்படும் என்பதை அந்த தலைவர் புரிந்து கொள்ளவில்லை.
சில நபர்களின் சுயநலத்தால் சில்லரை வியாபாரிகள், வியாபாரம் செய்ய முடியாத நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுகின்ற அபாயகரமான சூழலும் நிலவுகிறது. ஆனால் சில்லரை வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வியாபாரம் செய்திட முயற்சிக்கும் போது, பாதுகப்பற்ற சூழல் ஏற்படவும், வாய்ப்புகள் அதிகம் உள்ளனர். பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும் தங்களின் வாழ்வாதரத்தை எண்ணியும் வியாபாரம் செய்யும் சில்லரை வியாபாரிகளுக்கு மாநில அரசும்,மாவட்ட நிர்வாகமும் உரிய போலீஸ் பாதுகாப்பினை வழங்கிட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனைக்காக வருகின்ற லாரிகளை தடுப்பதற்கான முயற்சிகளும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்கு பெரும் பண முதலைகள் தலைமை தாங்குவதாகவும் ஒரு குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.
*வியாபாரிகளை நசுக்க துடிக்கும் சேகரன்*
நுகர்வோர் சேவை அமைப்பு என்கிற பேரில் இயக்கம் நடத்துகின்ற சேகரன் அவர்கள் நுகர்வோர் நலன் சார்ந்து செயல்படாமல் இல்ல வையாபாரிகளை நசுக்குவதிலேயே குறியாக இருந்து வருகிறார். வியாபாரிகள் வரிகளை முறையாக செலுத்தினால்தான் அரசுக்கு வருவாய். அதைக் கொண்டுதான் மக்கள் நல திட்டங்களையும் நுகர்வோர் நலன் சார்ந்த திட்டங்களையும் அரசு செயல்படுத்த முடியும். அரசின் வருவாயை கெடுக்கின்ற வகையில் செயல்பட்டு இல்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கெடுப்பதிலேயே குறியாக உள்ள சேகரன் அவர்கள் நுகர்வோர்களுக்கு தேவையான பொருள்கள் கிடைப்பதை தடை செய்ய முயற்சிப்பது ஏன்? என்று தெரியவில்லை.
வியாபாரிகளின் வாழ்வோடு விளையாடும் சேகரன் பசுமை தினமான இன்று (6.6.2020) எத்தனை மரக்கன்றுகள் நட்டார் என்பதை சொல்ல முடியுமா?
நாட்டில் மாசுக்களை ஏற்படுத்துகின்ற எத்தனையோ தொழிற்சாலைகள் இயங்கி கொண்டிருக்கின்றன. மதுப்பழக்கத்தால் நாட்டில் எவ்வளவோ குற்ற செயல்கள் நடக்கின்றன. அந்த ஆலைகளையெல்லாம் இழுத்து மூட சேகரன் அவர்கள் போராட்டம் நடத்த வேண்டியது தானே? அவர்களுக்கு எதிராக அந்த போராட்டத்த எந்த போராட்டத்தையும் நடத்த மாட்டார். ஏனெனில், அவர் எப்போதும் ஏழைகளுக்கெதிரான போராட்டத்தை மட்டுமே கையில் எடுப்பார் என்பதற்கு வேறு அன்று தேவையில்லை. பண முதலைகள் பக்கம் மட்டுமே எப்போதும் நிற்பார்.
ஒரு காலத்தில் வியாபாரியாக இருந்து பல முறைகேடுகளை செய்து அதில் தொடர்ந்து நீடிக்க முடியாமல் அந்த தொழிலை விட்டு ஓடி வந்தவர் தான் இந்த சேகரன். அதனால்தான் என்னவோ வியாபாரிகளை, அதிலும் குறிப்பாக சில்லரை வியாபாரிகளை நசுக்குவதையே தொழிலாக கொண்டுள்ளார்.
இவரைப் போன்றவர்களிடமிருந்து சில்லரை வியாபாரிகளை அரசும், மாவட்ட நிர்வாகமும் காப்பாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
*ஆ.வையாபுரி* ,
*நிறுவனர் / தலைவர்,*
" *தியாகி" வ.உ.சி.* *ஒர்க்கர்ஸ் யூனியன்* ,
*Cell: 95002 - 99882.*
Friday, June 05, 2020
On Friday, June 05, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*திருச்சியில் இன்று மட்டும் 12 பேருக்கு நோய் தொற்று உறுதி*
திருச்சியில் இன்று திருவானைக்கோவில் சொக்கநாதபுரம், மணப்பாறையில் உள்ள குமரன் மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர், கல்லுப்பட்டி , பீமநகா் யானைகட்டி மைதானம், கொட்டப்பட்டு, முத்தரசநல்லுாா் ஆகிய பகுதிகளை சோ்ந்த 12 போ் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதன் காரணமாக திருச்சியில் கொரோனா தாக்கத்திற்கு உள்ளானோாின் எண்ணிக்கை மொத்தம் 112 ஆக உயா்ந்து உள்ளது. கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
On Friday, June 05, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஜூன் 05
திருச்சியில் மீண்டும் வாழ்வாதாரத்தை துவக்கியுள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்யை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, எடுக்கப்படும் நடவடிக்கைகளால், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதித்துள்ள நிலையில் மீண்டும் துவங்கியுள்ள அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் திருச்சி, காந்தி மார்க்கெட், பழைய பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில், கிழக்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, மலைக்கோட்டை, பாலக்கரை, மற்றும் மாநகர பகுதியில் ஆட்டோக்களை இயக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் தொகுப்பினை, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
ஆட்டோ ஓட்டுனர்களின் சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்ட நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டு, பொருட்கள் வழங்கப்பட்டது.
முன்னதாக, ஓட்டுனர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி, முகக்கவசம் வழங்கப்பட்டு, சமூக இடைவெளி, உடல் மற்றும் சுற்றுப்புறத்தூய்மை குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அமைச்சர் வெல்லமண்டி நடராஐன் அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக பகுதி கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
On Friday, June 05, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
தொடர்ச்சியாக மக்களை உயிர் பாதுகாக்கும் மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்
துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் பேட்டி
திருச்சி தீயணைப்புத்துறை துணை மண்டல இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் கூறுகையில் ஜீவராசிகளுக்கும் நாங்கள் மனிதநேயத்தோடு உணவு அளித்து வருகிறோம். கொரோனா தொற்று ஏற்பட்ட காலங்கள் முதல் தீயணைப்புத்துறையினர் எத்தனையோ மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். அதில் சிலர் இறந்தும் உள்ளனர். மேலும் உயிரிழந்த நிலையில் உள்ள பிணங்களை மீட்கும் பொழுது கிணறுகளில் விஷவாயு கசிவு களில் மீட்பு பணியில் ஈடுபடும் போது எங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்துதான் நாங்கள் எங்கள் உயிரையும் பெரிதாக கருதாமல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் எங்களிடையே மீட்பு பணிகளை செய்தியாக வெளியிடும் பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.
மேலும்தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திர பாபு அவர்கள் வழிகாட்டுதல்படி பள்ளி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.
இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தமிழகத்தில் முதல் முறையாக காணொளி காட்சி மூலம் தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு பரிசுகளையும் பாராட்டுதல்களையும் வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்த ஓவிய போட்டிகளில் பல நாட்களாய் வீட்டில் முடங்கிக் கிடந்த மாணவ மாணவியர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக அமைந்தது திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மத்திய மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Monday, June 01, 2020
On Monday, June 01, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி நவல்பட்டு பூலாங்குடி காலனியில் பரிதாப சம்பவம்
மகன் இறந்ததால் அதிர்ச்சி எரி வாயு உருளையை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் தாய் தற்கொலை
திருச்சியில், மகன் இறந்த அதிர்ச்சியை தாங்காமல், எரிவாயு உருளையை திறந்து வெடிக்கவைத்து 2 மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த நவல்பட்டு பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 59). ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியை. இவரது கணவர் முருகேசன் ஏற்கெனவே இறந்து விட்டார். இவர்களது மகள்கள் விஜயலட்சுமி (28), விஜயவாணி (26), மகன் விஜயகுமார் (25). இதில் டிப்ளமோ படித்து முடித்த விஜயகுமார் கடந்த 9 மாதத்துக்கு முன் விபத்தில் சிக்கி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று இரவு 7 மணியளவில் விஜயகுமாரின் உடல்நிலை மோசமானதால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்
மருத்துவ குழுவினர் வந்து பரிசோதித்ததில் விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த செய்தியை அருகில் உள்ளவர்களிடம் சொல்லாமல் மனதுக்குள்ளேயே வைத்து வேதனையில் இருந்த விஜயலட்சுமி குடும்பத்தினருடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக இரவு மணிக்கு வீட்டில் உள்ள அறையில் விஜயகுமாரின் உடலை எடுத்து சென்றனர். அங்கு சமையல் எரிவாயு உருளையை திறந்து விட்டு மூவரும் சிலிண்டர் அருகே நின்று கொண்டு தீயை பற்ற வைத்தனர்.
தீ பற்றியவுடன் எரிவாயு உருளை வெடித்து சிதறியது. இதில் 3 பேரும் உடல் கருகி இறந்தனர். எரிவாயு உருளை வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...








