Thursday, March 14, 2019

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய அங்கீகாரம் பெற்றுள்ளது


ஜோசப் கண் மருத்துவமனை 1934 ஆம் ஆண்டு டாக்டர் ஜோசப் என்பவரால் நிறுவப்பட்டு இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது இம்மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய நிறுவனம் தன் மருத்துவ இறுதிநிலை அங்கீகாரச் சான்றிதழ் வழங்கியுள்ளது

மருத்துவமனையில் கண் பரிசோதனை மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து முறையான குறைபாடுகளும் நோய்களும் சிறந்த முறையில் தீர்வும் சிகிச்சை வழங்கப்படுகிறது அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் மூலமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கேற்ற சரியான வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கண் மருத்துவ சேவைகளில் முன்னோடியாக செயல்பட்டு வரும் ஜோசப் கண் மருத்துவமனை தென் தமிழகத்தில் முதல் கண் மருத்துவமனை ஆக இந்த உயரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது கூட்டு முயற்சியோடு 300க்கும் மேற்பட்ட கடினமான தகுதிகளை நிவர்த்தி செய்து ஆய்வாளர்களால் பன்முறை ஆய்வு செய்தபின் இந்த தரச்சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது இந்த நிறுவனத்தில் ரூபாய் 2 கோடி செலவில் 6 அறுவை சிகிச்சை அரங்குகள் உலகத் தரத்திற்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டு உள்ளது தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டு பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது இவற்றோடு சர்வதேச நோயாளிகள் கொள்கை ஜோசப் கண் மருத்துவமனை பின்பற்றி வருகிறது என்று தெரிவித்தனர்

0 comments: