Thursday, August 14, 2014
பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்டஏ.ஜி . கல்வியியல்கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்துள்ள அவிநாசிபாளையத்தில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் கல்லூரி முறையான அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கோவை மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குனர் மூக்கையா தலைமையிலான அதிகாரிகள் நேற்று அக்கல்லூரிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அதில் உரிய அனுமதி பெறாமல் நான்கு தளங்களுடன் 38 ஆயிரம் சதுரடியில் கல்லூரி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அக்கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்லூரி முதல்வர் அறை மற்றும் அலுவலக அறை ஆகியவற்றை மட்டும் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் ஊரக துறையிடம் உரிய அனுமதிபெற கல்லூரி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. மனை மற்றும் கட்டடங்கள் நகர் ஊரமைப்பு துறையிடம் அனுமதியின்றி கட்டிடம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதால் நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவுகள் 56, 57ன் கீழ் மூடி முத்திரையிடப்படுகிறது என்ற அறிவிப்பை கல்லூரி முதல்வர் அறையில் அதிகாரிகள் ஒட்டினர்.
உரிய அனுமதிபெறாமல் இயங்கி வரும் அனைத்து கல்லூரிகளுக்கும் சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை ம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ...
-
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை ...
-
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் அகஸ்தியர் அரு...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றத்து அதில் பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண...
0 comments:
Post a Comment