Thursday, August 14, 2014
கோபி, : கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வலியுறுத்தல்.
திருப்பூர் மற்றும் புது திருப்பூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் சாயத்தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிறுவனங்களில் திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி ஈரோடு, கோவை, மதுரை, அரியலூர், பெரம்பலூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இதுதவிர ஈரோடு மாவட்டம் கோபி, அந்தியூர், அத்தாணி, பங்களாபுதூர், கள்ளிப்பட்டி, நம்பியூர், கணக்கம்பாளையம், டி.என்.பாளையம், கணபதிபாளையம், புதுக்கரைபுதூர், கூகலூர், குன்னத்தூர், கொளப்பலூர், கெட்டிசெவியூ, சிறுவலூர், திங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.
இவர்களை தனியார் நிறுவனங்கள் வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மூலம் காலையில் வீட்டில் இருந்தே அழைத்து வந்து பின்னர் இரவு மீண்டும் வீட்டிற்கே கொண்டு சென்று விடுகின்றனர். இதற்காக கோபி பகுதியில் மட்டும் 120க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாள்தோறும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஆட்களை ஏற்றிச் செல்வதாலும், குறித்த நேரத்திற்கு நிறுவனத்திற்கு செல்லவேண்டும் என்பதற்காக அதிவேகமாக செல்வதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்று முன்தினம் இதே போன்று பனியன் நிறுவன தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அத்தாணி நோக்கி சென்ற வேன் புதுக்கரைபுதூர் அருகே சாலையில் தலைகுப்புற கவிழ்ந்ததில் 7 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அதே போன்று கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் தனியார் நிறுவன வேன்கள் சுமார் 12க்கும் மேற்பட்ட விபத்துகளில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதனால் தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கும் வே கக்கட்டு ப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று அனைத்து இந்து இயக்கம் மற்றும் பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சுவாமி விவேகானந்தர் தர்ம பிரச்சார சேவா சமிதி அமைப்பின் மாநில அமைப்பாளர் ராஜகுரு மற்றும் பாஜக மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்பாபு ஆகியோர் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக தனியர்£ நிறுவன வேன்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்ற வாகனங்களை சோதனை நடத்தும்போது தனியார் நிறுவன வாகனங்களை முறையாக சோதனை நடத்துவதில்லை. அதனால் விதிமுறையை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஆட்களை ஏற்றிக்கொண்டும், அதிவேகத்துடனும் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் அரசு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளது போன்று தனியார் நிறுவன வாகனங்களுக்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.
இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோபி கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளோம். ஒரு வாரத்தில் நடவடிக்கை இல்லை என்றால் கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை சிறை பிடித்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை ம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ...
-
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை ...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றத்து அதில் பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...

0 comments:
Post a Comment