Wednesday, August 27, 2014
லாரிகள் சிறைபிடிப்பு
அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் தண்ணீர் இல்லாததால் வறண்டு காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஏரியை ஆழப்படுத்த ஈரோடு கனிமவளத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனையடுத்து கடந்த மாதம் மண் அள்ள டெண்டர் விடப்பட்டது. இதில் டெண்டர் எடுத்தவர்கள் ஏரியில் மண் அள்ளி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை டெண்டர் எடுத்தவர்கள் ஏரியில் மண் அள்ளி லாரிகளில் சென்று கொண்டிருந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் அங்கு வந்து லாரிகளை சிறைபிடித்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார், வருவாய் ஆய்வாளர் அழகேசன், கெட்டிசமுத்திரம் கிராம நிர்வாக அதிகாரி முருகேசன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.
பேச்சுவார்த்தை
அவர்கள் லாரிகளை சிறைபிடித்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விவசாயிகள், ‘ஏரியில் அள்ளப்படும் மண் ஒரு லாரிக்கு ரூ.200 என்று விற்கப்படுகிறது. எண்ணமங்கலம், அந்தியூர், கெட்டிசமுத்திரம், கோவிலூர், பச்சாம்பாளையம், சின்னதம்பிபாளையம் உள்பட அந்தியூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயத்துக்கு வண்டல் மண்ணை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அதிக மகசூல் கிடைக்கிறது. எனவே ஏரியில் அள்ளப்படும் மண்ணை விவசாயிகளுக்கே மட்டுமே விற்க வேண்டும். செங்கல் சூளைக்கோ, சாலை அமைக்கவோ பயன்படுத்தக்கூடாது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
அதற்கு அதிகாரிகள், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை யாரும் ஏரியில் மண் அள்ளிச்செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றனர். அதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...

0 comments:
Post a Comment