Thursday, August 14, 2014
திருப்பரங்குன்றம் தாலுகாவில், முதியோர் உதவித்தொகை
பெறுபவர்களில் தகுதி இல்லாதவர்களை நீக்க, அதிகாரிகள் கணக்கெடுப்புப்
பணிகளை தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
ஆதரவற்ற முதியோர்கள், ரூ. 5000-க்கு மேல் சொத்து இல்லாதவர்கள், மகன், மகள் ஆதரவில்லாதவர்கள், உழைக்கக் கூடிய சக்தியில்லாதவர்கள் மற்றும் விதவை, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு உதவித் தொகையாக முதலில் நூறு ரூபாயும், பின்பு அடுத்தடுத்த காலங்களில் படிப்படியாக ரூ. 200, ரூ. 400 எனவும் வழங்கியது.
இதனை, தற்போது ஆயிரம் ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதனால், கிராமவாசிகள் முதல் நகரவாசிகள் வரை அனைவரும் முதியோர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்த வண்ணம் உள்ளனர்.
அதேபோல், அம்மா திட்ட முகாம், மனுநீதி நாள் முகாம் உள்ளிட்ட முகாம்களின் போதும் 90 சதவிகிதத்தினர் உதவித்தொகை கோரியே விண்ணப்பிக்கின்றனர். இதில், பெரும்பாலானவர்கள் வசதி படைத்தவர்களும், அரசியல்வாதிகளின் உறவினர்களுமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், இது தகுதியுள்ளவர்களுக்கு கிடைக்காமலும் உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு, உதவித் தொகை பெறுபவர்கள் அதற்கான தகுதி உள்ளவர்களாக உள்ளனரா என கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதியோர் உதவித்தொகை பெறுபவர்களில் தகுதியில்லாதவர்கள் பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு, அவர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, அதிகாரி ஒருவர் தெரிவித்தது: தகுதியானவர்களுக்கு முதியோர் உதவித் தொகை வழங்கும் நோக்கிலும், அதே சமயம் தகுதி இல்லாதவர்களை அப்பட்டியலில் இருந்து நீக்கவும், தற்போது கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியானது 90 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. மதுரை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதியோர் உதவித் தொகை பெறுகின்றனர். தற்போது எடுத்த கணக்கெடுப்பின்படி, இதில் 10 ஆயிரத்துக்கும் மேலானோர் உதவித்தொகை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
திருப்பரங்குன்றம் தாலுகாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர். தகுதி நீக்கம் செய்யப்பட்டோர் பட்டியலை, அந்தந்த கிராமங்களில் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக, அவர் தெரிவித்தார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை ம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ...
-
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை ...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றத்து அதில் பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
0 comments:
Post a Comment