Thursday, September 11, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள சாம்பவலசை சேர்ந்தவர் செல்வன் (வயது 42). விவசாயி. இவரது மனைவி ஜெயா (40). இவர்களுக்கு சூர்யா (15) என்ற மகன் உள்ளார்.
இவர் அருகிலுள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சூர்யா பள்ளி முடிந்து வீடு திரும்பினார்.
அப்போது தாய் ஜெயா மகனை கண்டித்தார். இதனால் தாய்க்கும், மகனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சூர்யா கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறி தோட்டத்துக்கு சென்றார். அங்குள்ள கிணற்றில் குதித்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் ஜெயா மகனை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்தார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் கிணற்றில் தத்தளித்தார். ஜெயாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் குதித்து ஜெயாவை மீட்டனர்.
ஆனால் சூர்யா பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த தகவலறிந்ததும் காங்கயம் போலீசார் விரைந்து வந்து சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மயக்க நிலையில் இருந்த ஜெயா காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாய்க்கும், மகனுக்கும் எதற்காக தகராறு நடந்தது? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment