Thursday, September 11, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த ஊதியூர் அருகேயுள்ள இச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் புவனேஸ்வரி(வயது 17). இவர் காங்கயம்–தாராபுரம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
புவனேஸ்வரியின் தம்பி மதன்குமார் அதே பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பினார். வேலைக்கு சென்ற பெற்றோரும், டியூசனுக்கு சென்ற தம்பியும் வீடு திருமப்பவில்லை.
வீட்டில் தனியே இருந்த புவனேஸ்வரி திடீரென்று வீட்டின் குளியல் அறைக்கு சென்றார். அங்கு தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
வீடு திரும்பிய பெற்றோர் மகளை காணாது திடுக்கிட்டனர். குளியல் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. புவனேஸ்வரி கரிக்கட்டையாய் கிடப்பதைப்பார்த்து அலறி துடித்தனர்.
சம்பவம் குறித்து ஊதியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று புவனேஸ்வரியின் உடலைக்கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் புவனேஸ்வரியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். வீட்டில் மாணவி ஏதும் கடிதம் எழுதி வைத்து இருக்கிறாரா? என்று சல்லடை போட்டு தேடினார்கள்.
அப்போது மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. விசாரணைக்கு பின்னர் கடிதத்தில் மாணவி எழுதிய தகவலை தெரிவிக்கிறோம் என்று போலீசார் தெரிவித்து விட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கிருந்த போலீசாரை முற்றுகையிட்டு புவனேஸ்வரி கடிதத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறாள் என்று கூறவேண்டும். அதன் அடிப்படையிலேயே விசாரிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
கண்டிப்பாக கடிதத்தின் அடிப்படையில்தான் விசாரணை நடைபெறும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன் பின்னரே அவர்கள் சமாதானம் அடைந்தனர்.
மாணவி தீக்குளித்து இறந்த சம்பவத்தையொட்டி அவர் படித்த பள்ளிக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளியில் நடந்த ஏதேனும் சம்பவம் காரணமாக மாணவி தற்கொலை செய்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...

0 comments:
Post a Comment