Thursday, September 11, 2014
லிங்கா படத்தின் படப்பிடிப்பன்று மக்களைச் சந்தித்தார் ரஜினி. மிக நீண்ட வரிசையில் காத்திருந்து அவரைச் சந்தித்து படமெடுத்துக் கொண்டும் வாழ்த்துகள் பெற்றும் மகிழ்ந்தனர் மக்கள்.
ரஜினியின் லிங்கா படப்பிடிப்பு ஷிமோகாவில் நடந்தது. திங்கள்கிழமை ரஜினியைப் பார்ப்பதற்காக கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் திரண்டு வந்திருந்தனர். தமிழகத்திலிருந்தும் பல ரசிகர்கள் ரஜினியைப் பார்க்க ஷிமோகாவுக்கு வந்து, சாகர் என்ற இடத்தில் அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு முன் குவிந்துவிட்டனர்.
முதலில் யாரையும் சந்திக்கும் திட்டத்தில் ரஜினி இல்லை. சண்டைக் காட்சியில் நடித்ததில் அவரது இடது கையில் வலி ஏற்பட்டதால் ஓய்வில் இருந்தார். ஆனால் பெண்கள் குழந்தைகளுடன் வந்து காத்திருக்கும் தகவல் அறிந்ததும், தன் உதவியாளர்களை அனுப்பி அனைவரையுமே பார்ப்பதாக உறுதியளித்தார்.
பின்னர் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று ரஜினியைக் காண காத்திருந்தனர். இவர்களில் பெருமளவு பெண்கள்தான். கைக் குழந்தைகளுடன் வந்து ரஜினியைப் பார்த்தனர். நீண்ட நேரம் நின்று கொண்டே, வந்திருந்த அத்தனை ரசிகர்களையும் பொது மக்களையும் சந்தித்தார். அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பல ரசிகர்கள் அவரைக் கட்டிப் பிடித்தும், கைகளில் முத்தம் கொடுத்தும் மகிழ்ந்தனர். பெண்கள் தங்கள் குழந்தைகளை அவரிடம் கொடுத்து ஆசி பெற்றனர். அனைவரையும் பத்திரமாக ஊருக்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்டார் ரஜினி.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் ட...
0 comments:
Post a Comment