Thursday, October 15, 2015
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் பேசினார்.
திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் பதவியேற்பு விழா உடுமலையில் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, உடுமலை மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கும், ரயில் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கும் பொள்ளாச்சி வ.ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதிமுக தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுகவின் 44-ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பொள்ளாச்சி வ.ஜெயராமன் பேசியது:அதிமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் துறை வாரியாக பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. புதிய திட்டங்களை உருவாக்குவதிலும் அதை நிறைவேற்றுவதிலும், சட்டப்போரட்டத்தின் மூலம் மாநில உரிமைகளை மீட்பதிலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிகர் யாருமில்லை. பாமர மக்கள் முதல் படித்த இளைஞர்கள் வரை அதிமுக அரசை ஆதரித்து வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது போலவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார்.
இதைத்தொடர்ந்து அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் கே.ஆறுச்சாமி (உடுமலை மேற்கு), ஆர்.ஜி.ஜெகநாதன்(உடுமலை கிழக்கு), மெட்ராத்தி நா.அண்ணாத்துரை (மடத்துக்குளம்), நகரச் செயலாளர் கே.ஜி.சண்முகம் (உடுமலை) உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...

0 comments:
Post a Comment