Thursday, September 11, 2014
முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, விஜயகாந்த் மீது வழக்கு
தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் 30.8.2012 அன்று தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்த
நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஜெயலலிதாவை
அவதூறாக பேசியதாக கூறி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்
வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணையில் ஆஜராவதிலிருந்து விஜயகாந்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உளுந்தூர் பேட்டை அருகே பிப்ரவரி 2 ஆம் தேதி தே.மு.தி.க.
சார்பில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட விஜயகாந்த், மனைவி பிரேமலதா,
எம்.எல்.ஏ.க்கள் பார்த்த சாரதி, வெங்கடேசன் ஆகியோர் தமிழக அரசு மற்றும்
காவல் துறையினரை, அவதூறாக பேசியதாக அரசு வக்கீல் பொன்.சிவா, விழுப்புரம்
மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜயகாந்த், பிரேமலதா, பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர்
நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி
நீதிமன்றத்திற்கு வருவதிலிருந்து விலக்கி அளித்து சென்னை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ள அந்த நகலை சமர்பித்து மனுதாக்கல் செய்தனர்.
பின் வழக்கை விசாரித்த நீதிபதி இவ்வழக்கு விசாரணையை அக்டோபர் 20 தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
அதிகாலை திருச்சியில் வெல்லப்போவது யார் ? மாவட்ட காவல் துறையா ? எல்பின் ராஜாவா ? ... திருச்சி மன்னார்புரம் பகுதியில் தலைமை அலுவலகம...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
திருப்பூர்,அக்.4- திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் காங்கயம் ரோடு, சி.டி.சி.டெப்போ அருகில் ...
0 comments:
Post a Comment