Wednesday, December 24, 2014
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது36), இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வஞ்சிப்பாளையத்தில் உள்ள தனது தங்கை கார்த்திகா வீட்டிற்கு குடிபோதையில் சென்று அவரது கணவர் சசிகுமாரிடம் சொத்து சம்பந்தமாக தகராறு செய்துள்ளார். இது குறித்து கார்த்திகா தனது மற்றொரு அண்ணன் சிவக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்து சாலையில் உள்ள கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார்.காலையில் வெகுநேரமாகியும், கிருஷ்ணமூர்த்தியை காணாததால் அவரது தந்தை தோட்டத்து சாலைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு கூர்மையான ஆயுதங்கள் மற்றும் மரக்கட்டையால் மர்ம மனிதர்களால் தாக்கப்பட்டு கிருஷ்ணமூர்த்தி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சேவூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமசாமி, இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் சேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினார்கள்.கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் மூலம் சோதனை செய்யப்பட்டது. மோப்ப நாய் யாரையும் பிடிக்கவில்லை. கிருஷ்ணமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவரை தம்பி மற்றும் தங்கை கணவர் அடித்துக்கொலைசெய்தார்களா? அல்லது மர்மமனிதர்கள் யாராவது அடித்துக்கொலை செய்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்திக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்க...
-
நாமக்கல் மாவட்டம் குமாராபாளையத்தை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது53).இதே ஊரைச்சேர்ந்தவர்கள் ஹரிதாஸ் (42).சக்திவேல்(43).ராஜ்குமார் (22) ஓரே ஊர...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...

0 comments:
Post a Comment