Friday, January 23, 2015
ரேசன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அவ்வப்போது திடீர் ஆய்வுகள்
நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று கூட்டுறவு சங்கங்களின்
இணைப்பதிவாளர் வெங்கடேசன் தலைமையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு
கூட்டுறவு ரேசன் கடைகளில் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒரு சில ரேசன் கடைகளில் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி உள்ளிட்ட குடிமைப் பொருட்களை முறையாக விநியோகம் செய்யாமல் இருப்பதும், பொருட்களை போலி ரசீது மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் சில கடைகளில் விற்பனைத் தொகையை கருவூலத்திற்கு செலுத்தாமலும், இருப்புத் தொகையில் குறைவு ஏற்படுத்தி இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதுபோன்ற முறைகேடுகளில் தேங்கல்பட்டி, மதிப்பனூர், மேலப்பொன்னகரம், பெத்தானியாபுரம்–1, பொன்னிநகர்–1 ஆகிய 5 கடைகளின் விற்பனையாளர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து 5 கடைகளின் விற்பனையாளர்களையும் உடனடியாக பணிஇடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் உத்தரவிட்டார். முறைகேடுகளில் ஈடுபட்ட விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 652 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் வெங்கடேசன் கூறும்போது இது போன்ற திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு முறைகேடுகளில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
0 comments:
Post a Comment