Friday, May 01, 2015
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் .வெள்ளிரவெளி ஊராட்சி தேவனம்பாளையம் நாச்சியம்மன் செங்குந்த திருமணமண்டபத்தில்1330பயனாளிகளுக்கு ரூ .14.08 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிக்சி கிரைண்டர் ,மற்றும் மின்விசிறிகளை மாண்பிமிகு .சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சர் .திரு .தோப்பு என் .டி .வெங்கடாசலம் .அவர்கள் .இன்று 01-05-2015. வழங்கி பேசியதாவது .
மாண்பிமிகு மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் மூன்றாவது முறையாக ஆட்சிப்பொறுப்பு ஏற்ற பிறகு தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் எண்ணற்ற பல மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்கள் .அந்த வகையில் நமது மாவட்டத்தில் அமைந்துள்ள ஊத்துக்குளி ஆனது கடைகோடியில் உள்ளது .முன்னோறு காலத்தில் மக்கள் வருவாய்துறையய் சார்ந்த பணிகளுக்காக அவினாசி மட்டும் பெருந்துறை தாலுக்கா அலுவலகதிற்கு செல்ல வேண்டி இருந்தது . அதனை மாற்றி ஊத்துக்குளியய் தனி வட்டமாக அறிவித்து புதிய தாலுக்கா அலுவலகம் கட்டுவதற்ககாக நிதியுனையும் ஒதுக்கி தந்துள்ளார் மேலும் மக்களின் குடிநீர் பிரச்சனைக்காக கூட்டுக்குடிநீர் திட்டத்தினை வழங்கி உள்ளார் . மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தினை 54 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தியும் அரசு மேல்நிலை பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்க்காக நிதியுனையும் மற்றும் சாலைப் பணிகளுக்கும் நிதி உதவிகளை தாயுள்ளத்தோடும் வழங்கி உள்ளார்கள் . நரிக்குறவர்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளது . மேலும் விலையில்லா 20கிலோ அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் ,எந்த மாநிலத்திலும் இல்லாத முதியோர் ஓய்வூதிய தொகையாக ரூ .1000.,கற்பிணி பெண்களுக்கு அரசு மருத்துவமனையில் பிரசவிக்கின்ற பெண்களுக்கு ரூ .12000ம் .இல்லத்தரசிகளுக்கு விலையில்ல மிக்சி கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளும் வழங்கப்படுகிறது .சமுதாய வளைகாப்பு கற்பிணி பெண்களுக்கு நடத்தப்படுகிறது . பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா 14.வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது . மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டமும் ,அம்மா உணவகங்கள் அம்மா சிமெண்ட் அம்மா உப்பு , அம்மா மருந்தகங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் தாய் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ .40.லட்சம் முதல் 50.லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது . இதன் மூலம் ஊராட்சிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...


0 comments:
Post a Comment