Monday, July 06, 2015














தமிழகத்தில் ஏழைகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா என நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதை முன்னிட்டு, அதற்காக
சிறப்பு வழிபாடு மற்றும் வேண்டுதல் செய்தவர்களுக்கு மதுரை பாண்டி கோயிலில்
மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பரிசளிப்பு மற்றும் அன்னதானம்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த அமைச்சர்
பன்னீர்செல்வம் பேசியதாவது: அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மீண்டும்
முதல்வராவதற்காக மதுரை மக்கள் அனைவரும் அலகு குத்தியும், காவடி சுமந்தும்
பல்வேறு வேண்டுதல்களை செய்தனர். அதன் மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர்
ஜெயலலிதா மீதிருக்கும் அன்பும், பற்றும் வெளிப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் எந்த
அரசியல் தலைவரும் படைக்காத சாதனையை அவர் படைத்துள்ளார். ஏழை, பணக்காரர்
என்ற வித்தியாசமில்லாமல் அனைத்துத் தரப்பு மக்களுக்குமான நல்லாட்சியை அவர்
வழங்கிவருகிறார். முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியால், ஏழை எளிய மக்களின்
வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதாவிற்காக வேண்டுதல்
நிறைவேற்றியவர்கள் கெளரவிக்கப்பட்டனர். இதில், மதுரை மற்றும்
சுற்றுப்பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வெளிமாநிலத்தைச் சேர்ந்த நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நத்தம் ஆர்.விஸ்வநாதன்,
ஆர்.பி. உதயக்குமார், எஸ். சுந்தர்ராஜன், மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா,
துணை மேயர் கு. திரவியம், தில்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன்,
ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
«.þ.«.¾¢.Ó.¸.¯ñ½¡Å¢Ã¾ô§À¡Ã¡ð¼õ Á¼òÐìÌÇõ ¾¡æì¸¡ §Å¼ÀðÊ °Ã¡ðº¢ ÁýÈ ¾¨ÄÅ÷ S.§¸¡À¡Ä¸¢Õ‰½ý ¾¨Ä¨Á¢ø ¬Â¢Ãò¾¢üÌõ §ÁüÀ𧼡÷ ¯ñ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
செயற்கை கருத்தரிப்பு மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் குரு மருத்துவமனையில் முதன் முறையாக திருமணமாகி 20 வருடங்கள் கழித்து 50 வயது பெண் ஒர...
-
ஈரோடு எஸ்.எஸ்.பி. நகர் பகுதியில் காலி நிலத்தில் திடீரென்று நீரூற்று தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இடி விழுந்ததால் இந்த நீரூற்று தோன்ற...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
0 comments:
Post a Comment