Thursday, February 04, 2016
தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டத்தையொட்டி கடந்த ஜனவரி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒருபகுதியாக இன்று சர்வதேச தரவரிசை சதுரங்க போட்டிகள் இன்று தொடங்கி (4ம் தேதி) 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதன் துவக்க நிகழ்ச்சி இன்று காலை காமராஜர் கல்வி அரங்கத்தில் நடைபெற்றது. பிடே (FIDE) எனப்படும் உலக சதுரங்க கழகம், அகில இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சதுரங்க கழகத்தின் அங்கீகாரத்துடன், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் டீகே செஸ் மையம் இணைந்து நடத்தும் சர்வதேச தரவரிசை செஸ் போட்டியில் சுமார் 300 போட்டியாளர்கள் பங்கு பெறுகிறார்கள்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்தும், இங்கிலாந்து நாட்டில் இருந்தும் இந்த போட்டியில் பங்கு பெறுகிறார்கள். சர்வதேச மாஸ்டர் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற ஆச. மேனுவல் ஆரோன் போட்டிகளை துவக்கி வைத்தார். காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் லாஜிஸ்டிக் பிரிவு தலைவர் ஹரிகரன் வாழ்த்துரை வழங்கினார். டீகே செஸ் மையத்தின் தலைவர் டாக்டர். வசீகரன் சிறப்புரை நிகழ்த்தினார்.
சர்வதேச நடுவர் அனந்தராமன், மற்றும் எப்ரேம் ஆகியோர் போட்டிகளுக்கான விதிமுறைகளை போட்டியாளர்களுக்கு விளக்கிக் கூறினார். வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசுத் தொகையாக ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும், 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு 64 பரிசு கோப்பைகள் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை டீகே செஸ் மையத்தின் செயலாளர் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை கற்பகவள்ளி, பேராசிரியர்கள் சாந்தி, ரெமோனா, சுபாஷினி, தேவராஜ், ராஜேஷ், IQAC ஒருங்கிணைப்பாளர் நாராயணசாமி, அலுவலர்கள் பொன்ரத்தினம், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment