Thursday, May 12, 2016
திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் தர முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.ஜெயந்தியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்குத் தொகுதி முதன்மை முகவர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் புதன்கிழமை அளித்த மனு: திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 35-ஆவது வார்டு குருவம்பாளையம் பகுதியில் மே 10-ஆம் தேதி இரவு திமுகவைச் சேர்ந்தவர்கள் ஆனந்தன் என்பவரது வீட்டில் பல பைகளைக் கொடுத்தனர்.
இதுகுறித்து உடனடியாக பறக்கும் படை, தேர்தல் பணிகளுக்கான மாவட்டக் காவல் பார்வையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பறக்கும் படையினரும், காவல் துறையினரும் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.
மேலும், மே 10-ஆம் தேதி இரவு திமுகவினரின் வாகன நடமாட்டும் அங்கு அதிக அளவில் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment