Thursday, September 08, 2016
ரேஷன் கார்டில் ஆதார் எண்களை நாமே நமது ஸ்மார்ட் போன் மூலம் மிக எளிதாக பதிவு செய்யலாம்.
ஸ்மார்ட்போனில் Google Play App Store ல் TNEPDS என்ற இலவச (Application) ஐ பதிவிறக்கம் செய்யலாம் அதற்கான ( link )கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNEPDS Application உள் சென்ற உடன் ஏற்கனவே ரேஷன் கடையில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்தால் உடனே ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய OTP (One Time Password) SMS நமது தொலைபேசிக்கு வரும். அந்த எண்களை Applicationல் பதிவு செய்தபின் செயலி திறக்கப்படும்.
அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் இடத்தை தொட்டவுடன் ஸ்கேன் செய்ய ஏதுவாக கேமரா திறக்கும். பின் நமது ஸ்மார்ட் போன் கேமரா முன்பு நம் ஆதார் அட்டையில் உள்ள QR CODE (கருப்பு புள்ளிகள் நிறைந்த பெட்டி போன்ற படத்தை) காட்டினால் QR code ஸ்கேன் செய்யப்பட்டு நமது ஆதார் எண் திரையில் தோன்றும்.
உடனே நாம் "சமர்ப்பி" என்ற பட்டனை அழுத்தினால் நமது ஆதார் எண் பதிவாகிவிடும். பதிவான ஆதார் எண் அதில் தோன்றும்.
முதலில் குடும்ப தலைவர் ஆதார் அட்டையும், அதன்பின் ரேசன் கார்டில் உள்ள வரிசைப்படி குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளையும் வரிசையாக பதிவு செய்யவேண்டும். இது மிக எளிதான செயல். விரைவாக பதியப்பட்டு விடும்.
மேலும் இந்த Application மூலம் நமது ரேஷன் கார்டுக்குரிய பல்வேறு செயல்களை வீட்டில் இருந்தே நாம் கண்காணிக்கலாம்.
இந்த TNEPDS APPLICATION ஐ பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தி கொண்டு தங்களது நண்பர்களுக்கும் SHARE செய்யவும்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
0 comments:
Post a Comment