Wednesday, November 02, 2016
On Wednesday, November 02, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்50 கைது.
திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை
முற்றுகையிட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர்
போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை வறட்சி
மாநிலமாக அறிவித்தது போல தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்
என்று இந்த போராட்டத்தின்போது வலியுறுத்தபட்டது. மேலும் குறுவை, சம்பா,
வாழை விவசாயிகள தண்ணீரின்றி பாதிக்கபட்ட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உரிய
நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் முழக்கமிட்டனர். கரும்பு
விவசாயிகளுக்கு 50,000 ரூபாயும், வாழை விவசாயிகளுக்கு 1 லட்சம் ரூபாயும்
வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில்
ஈடுபட்டவர்களுடன் பொதுப்பணி துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் சமரச
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிட மறுத்த விவசாயிகள் தலைமை
பொறியாளர் அலுவலகத்திற்குள் தரையில் படுத்துக்கொண்டு குடியேறும்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 50 கும் மேற்பட்ட
விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
திருப்பூர் வடக்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் பெருமாநல்லூர் ரோட்டில் உள்ள பாண்டியன் நகரில் மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா, ' மீண்ட...
0 comments:
Post a Comment