Thursday, June 01, 2017
திருச்சியில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால்தலைகள் பழம் பொருட்களின் மாபெரும் கண்காட்சி். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள், பழங்கால பொருட்களின் மாபெரும் கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் ஸ்ரீநிவாசா ஹாலில் ஜீலை 7, 8, 9 உள்ளிட்ட மூன்று நாட்களில் நடைபெறுகிறது. கண்காட்சியில் இந்தோ டேனிஷ் நாணயங்கள், இந்தோ டச்சு நாணயங்கள், இந்தோ பிரெஞ்சு நாணயங்கள், ஆங்கில கிழக்கிந்திய நிறும நாணயங்கள், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள், சுதந்திர இந்திய நணயங்களில் பொது பயன்பாடு மற்றும் நினைவார்த்த நாணயங்கள் தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, அலுமினியம், நிக்கல், ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உள்ளிட்ட நாணயங்களுடன் சேரர், சோழர், பாண்டியர் கால நாணயங்களும் காட்சிப் படுத்துகிறார்கள். பணத்தாள்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா , இந்தியா, இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், வெனிசுலா, சாம்பியா , ஜிம்பாபே, இங்கிலாந்து, ஆப்ரிக்கா என இரு நூறு நாடுகளின் பணத்தாள்கள் காட்சிப்படுத்தப் படுகின்றன. பழங்கால பொருட்களில் லாந்தர் விளக்குகள், தராசு, எடைக்கற்கள், படி, மரப்பாச்சி பொம்மைகள், சுடுமண் பொம்மைகள் உட்பட பல்வேறு பொருட்களும், தபால் தலைகளும் காட்சிப் படுத்துகிறார்கள். அனுமதி இலவசம் . அனைவரும் வருக. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகரன், பொருளர் அப்துல் அஜீஸ், பாண்டி, முகமதுசுபேர், கமல கண்ணன் உள்ளிட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கண்காட்சிக்கான ஏற்பாட்டினை செய்து வருகிறார்கள்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருச்சி டிச 17 கோரிக்கை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தெ...
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
-
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் பொதுமக்கள் உருவ பொம்மைக்கு நாமம் போட்டு வினோத ஆர்ப்பாட்டத்தை ம...
-
Today evening Coimbatore CBOA team ESWAR AGS and RS Mathson along with other office bearers visited E-Syndicate bank RO, (Now RO II) and h...
0 comments:
Post a Comment