Sunday, May 13, 2018
திருச்சி.13.05.18.
ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
108 வைணவத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் தேர்த்திருவிழா இம்மாதம் 5 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று இரவு தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளிய பின்னர் இரவு 9 மணியளவில் கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
முக்கிய நிகழ்வான சித்திரைத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இன்று அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு தேர்மண்டபத்தை வந்தடைந்தார். இதனைத்தொடர்ந்து நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என நம்பெருமாளின் நாமத்தை விண்ணதிர முழங்கி தேரை வடம்பிடித்து இழுத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
-
வெல்லூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் அரசு மேல நிலைப் பள்ளி 7ம் வகுப்பு மாணவி v .ஹிமாசெய்லி பள்ளி அளவில் நடைபெற்ற இன...

0 comments:
Post a Comment