Friday, March 13, 2020
On Friday, March 13, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மாண்புமிகு உயர் நீதிமன்ற தீர்ப்பை அதிகாரிகள் எதிர்தரப்பினர் கட்சி பிரமுகர்கள் மதிக்கவில்லை ஊர் மக்கள் கதறல்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழ அன்பில் கிராமத்தில் ஆச்சிராமவள்ளி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் கீழ அன்பில், கோட்டைமேடு, ஜெங்கமநாதபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, படுகை, பராமங்கலம் ஆகிய 7 கிராமங்களுக்கு சொந்தமானதாகும். இந்தக் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோவிலில் மாசி மாதம் தோறும் திருவிழா நடைபெறும்.
அப்போது அம்மன் வீதி உலா வந்து கிடா வெட்டு நடைபெறும். இந்த வகையில் கடைசியாக கடந்த 1993 ஆம் ஆண்டு மாசி திருவிழா நடைபெற்றது. அப்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள் அம்மன் வீதி உலா செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திருவிழா நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. பழைய முறைப்படியே திருவிழா நடைபெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பைத் தொடர்ந்து 27 ஆண்டுகள் கழித்து தற்போது திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக வருவாய் துறை அதிகாரிகள் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள் அம்மன் கொண்டு செல்லாமல் ஒரு பொது இடத்தில் வைத்து அனைவரும் வழிபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் திருவிழா தொடங்கி நடைபெற்றது. ஆனால் பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்த அந்த சமூக மக்கள் மறுப்பு தெரிவித்தனர். தங்களது பகுதிகளிலும் அம்மன் வீதிஉலா நடைபெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே அம்மன் வீதிஉலா உலா நடைபெற்றது. ஆனால் அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள் அம்மன் வீதிஉலா நடைபெறவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்தனர். இதை கண்டித்து லால்குடி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. எனினும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மக்களை சமாதானப்படுத்தினர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழ அன்பில் கிராமத்தில் ஆச்சிராமவள்ளி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் கீழ அன்பில், கோட்டைமேடு, ஜெங்கமநாதபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, படுகை, பராமங்கலம் ஆகிய 7 கிராமங்களுக்கு சொந்தமானதாகும். இந்தக் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோவிலில் மாசி மாதம் தோறும் திருவிழா நடைபெறும்.
இதில் அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள் அம்மன் கொண்டு செல்லாமல் ஒரு பொது இடத்தில் வைத்து அனைவரும் வழிபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் திருவிழா தொடங்கி நடைபெற்றது. ஆனால் பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்த அந்த சமூக மக்கள் மறுப்பு தெரிவித்தனர். தங்களது பகுதிகளிலும் அம்மன் வீதிஉலா நடைபெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே அம்மன் வீதிஉலா உலா நடைபெற்றது. ஆனால் அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள் அம்மன் வீதிஉலா நடைபெறவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்தனர். இதை கண்டித்து லால்குடி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. எனினும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மக்களை சமாதானப்படுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment