Monday, April 06, 2020
On Monday, April 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி முசிறி
முசிறி தெருக்களில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் காய்கறிகள் விற்க ஏற்பாடு எம் எல்ஏ துவக்கி வைத்தார் பொதுமக்கள் மகிழ்ச்சி
திருச்சி மாவட்டம் முசிறி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு தெருக்களில் சென்று காய்கறிகளை விற்பதற்காக லோடு ஆட்டோ மூலம் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டது .முசிறி பேரூராட்சி சார்பாக வாரந்தோறும் புதன்கிழமை திருச்சி ரோட்டில், டிஎஸ்பி அலுவலகம் எதிரே உள்ள சந்தையில் காய்கறிகள் விற்பனை நடைபெறும் .இந்த வார சந்தையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வீட்டிற்கு பயன்படுத்துவது வழக்கம் .இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வார சந்தை விடுமுறை விடப்பட்டது. இதனால் வியாபாரிகள் சந்தையில் கடை போடுவது தடைபட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு காய்கறிகள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது .தெருக்களில் வந்து காய்கறிகள் விற்கும் வியாபாரிகள் சிலர் அதிக விலைக்கு காய்கறிகளை விற்றதால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் முசிறி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக லோடு ஆட்டோ ஒன்றில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக உழவர் சந்தையில் வாங்கி வியாபாரத்திற்கு அனுப்பப்படுகிறது. இதுகுறித்து முசிறியைச் சேர்ந்த குடும்பத்தலைவிகள் வாரந்தோறும், காய்கறிகளை சந்தையில் வாங்கி பயன்படுத்தி வந்தோம். வாரசந்தை நடைபெறாததால் சிரமம் ஏற்பட்டது. அதனை போக்கும் வகையில் பேரூராட்சி பேரூராட்சி நிர்வாகம் தெருக்களில் காய்கறிகளை விற்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது மிகுந்த ஆறுதலைத் தருகிறது பொதுமக்களுக்கு கட்டுப்படியாகும் நியாயமான விலையில் காய்கறிகளை விற்பனை செய்வது வரவேற்கத்தக்கது என்றனர். முன்னதாக காய்கறி விற்பனையை முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், முசிறி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.அப்போது மாவட்ட கவுன்சிலர் ரவிசந்திரன் , பேரூராட்சி தலைமை எழுத்தர் சேவியர் சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...

0 comments:
Post a Comment