Sunday, May 10, 2020
On Sunday, May 10, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200
மதுபாட்டில்களை கைப்பற்றிய போலீசார் ஒருவரை கைது செய்து தலைமறைவாக உள்ள விற்பனை மேலாளரை தேடி வருகின்றனர்.
முசிறி அருகே அமைந்துள்ள
கோதூர்பட்டியில் கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது இன்று 144 தடை உத்தரவு பின்னர் திறக்கப்பட்ட டாஸ்மார்க் கடையில் வியாபாரம் களைகட்டியிருந்தது
இந்நிலையில் நீதிமன்றம் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு உத்தரவிட்டது. இதனால் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்ய கோதூர் பட்டி டாஸ்மார்க் கடை விற்பனை மேலாளர் பாண்டியன் அப்பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கு 1200 குவாட்டர் மதுபாட்டில்கள் அடங்கிய 25அட்டை பெட்டிகளை ஆம்னி வேனில் ஏற்றி விற்பனை செய்வதற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அப்போது சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி போலீஸ் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீசார் 1200 மது பாட்டில்களையும், ஆம்னி வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஜெகநாதன் என்பவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆகும். மேலும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள கோதுர்பட்டி டாஸ்மார்க் கடையின் விற்பனை மேலாளர் பாண்டியனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...

0 comments:
Post a Comment