Sunday, May 10, 2020
On Sunday, May 10, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்த இணையதளம் மூலம் வகுப்புகள் நடத்தி அசத்தும் ஊராட்சி நடுநிலை பள்ளி.
ஆச்சரியத்துடன் பார்க்கும் பெற்றோர் மற்றும் கிராம மக்கள்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் வீட்டிலிருந்த படியே ஆன்டிராய்டு செல்போன் மூலமாக ஆன் லைன் வகுப்புகளை பள்ளித் தலைமையாசிரியர் நடத்தி வருகிறார்.
எசனைக்கோரை ஊராட்சியில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளிகள் முழுவதும் தொடர் விடுமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இப் பள்ளியில் கல்வி பயிலும் 6 வகுப்பில் 9 மாணவி, 7 மாணவர்களும், 7 ம் வகுப்பில் 2 மாணவர்களும், 6 மாணவிகளும் என 22 மாணவ மாணவிகளுக்கு பொது ஆங்கிலம், பொது கணிதம் ஆகிய பாடங்களை சென்னையைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மீட் என்ற ஆப் மூலமாக மாணவ மாணவிகளின் அன்ராய்டு செல்போன் மூலமாக இனையதளம் வழியாக ஆன் லைன் வகுப்புகளை கடந்த ஏப்ரல் 27 ம் தேதி முதல் தினசரி காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்று வருகிறது.
இந்த பாடங்களை பள்ளி ஆசிரியை ஒருவர் மற்றும் தனியார் தொண்டு நிறுவன ஆசிரியர்கள் இருவர் நடத்துகின்றனர். இந்த ஆசிரிய ஆசிரியைகள் நடத்தும் பாடங்களை பள்ளித் தலைமையாசிரியர் திருமாவளவன் தனது செல்போன் மூலமாக கண்காணித்து வருகிறார்.
இது குறித்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் திருமாவளவன் செய்தியாளரிடம் கூறியதாவது ..
இந்த வகுப்புகளை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதனை அவரது பெற்றோர்கள், கிராம மக்கள் ஆச்சரியப்படும் வகையில் இவ் வகுப்புகள் அமைந்துள்ளதெனவும், விடுமுறை காலங்களில் செல்போன்களில் எந்நேரமும் விளையாடு பொழுதைக் கழித்த குழந்தைகள் ஆக்கப்பூர்வமாக கல்வி கற்றலுக்காக பயன்படுத்துவதால் பெற்றோர்கள் மட்டுமல்லாது மாணவ மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...


0 comments:
Post a Comment